ஒப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ, ஆர்எக்ஸ் நியோ முக்கியம்சங்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஒப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ, ஆர்எக்ஸ் நியோ முக்கியம்சங்கள்!

ஒப்போ ஆர்எக்ஸில் மூன்று கேமிரா செட் அப் உள்ளன.

ஹைலைட்ஸ்
  • ஒப்போ ஆர்எக்ஸ்17-ல் 8 ஜிபி ரேம், ஸ்னாப் டிராகன் 710 SoC
  • ஒப்போ ஆர்எக்ஸ் நியோ 4ஜிபி ரேம் ஸ்னாப் டிராகன் 660 SoC
  • இரு போனிலும் நீர்துளி வடிவிலான நாட்ச்

ஒப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ மற்றும் ஆர்எக்ஸ் 17 நியோ ஸ்மார்ட்போன்களை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. இரு ஸ்மார்ட்போனிலும் உள்திரை ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் நீர் துளி வடிவிலான நாட்ச் உள்ளது. இரு போனிலும் கலர்OS 5.2வில் இயங்கும் 25 மெகா பிக்சல் AI முன்பக்க கேமிரா மற்றும் 6.4 இன்ச் திரையுடன் 91.5 சதவீத திரையைக் கொண்டுள்ளது.

ஆர்எக்ஸ் 17 ப்ரோ பிரிமீயம் வேரியண்டை விட ஆர்எக்ஸ் 17 நியோ கூடுதல் முக்கிய அம்சங்களை பெற்றுள்ளது. அதில் ஸ்னாப்டிராகன் 710 ப்ராஸாசர், 8ஜிபி ரேம் மற்றும் போனின் பின்புறத்தில் மூன்று கேமிராக்கள் உள்ளன. ஆர்எக்ஸ் 17 நியோவில் ஸ்னாப்டிராகன் 660 ப்ராஸாசர், 4ஜிபி ரேம் மற்றும் பின்புறம் இரட்டை கேமிராக்களை கொண்டுள்ளது. ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ ஆர்17 மற்றும் ஒப்போ ஆர்17 நியோவில் சில மாறுதல்கள் மட்டும் செய்யப்பட்டு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ, ஒப்போ ஆர்எக்ஸ் நியோவின் விலை

ஒப்போ ஆர் எக்ஸ் 17 ப்ரோ 6ஜிப்பி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுள்ள போன் விலை 49,800 ரூபாய். ஒப்போ ஆர்எக்ஸ் 17 நியோ 4ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனின் விலை ரூ. 29,000 ஆகும். ஒப்போ ஆர் எக்ஸ் 17 நியோ ரேடியண்ட் மிஸ்ட் மற்றும் எமரால்ட் கிரீனில் கிடைக்கிறது.

ஆர் எக்ஸ் 17 நியோ மோட்சோ ரெட் மற்றும் அஸ்ட்ரல் ப்ளூ நிறங்களில் கிடைக்கின்றன. இரு ஸ்மார்ட் போன்களும் நவம்.16ம் தேதியிலிருந்து இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் கிடைக்கும். ஒப்போ ஆர் எக்ஸ் 17 ப்ரோ மற்றும் ஆர் எக்ஸ் 17 நியோ ஐரோப்பாவில் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதம் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட வேரியண்ட்களான ஒப்போ ஆர்17 ப்ரோ மற்றும் ஒப்போ ஆர்17 நியோ ஆகும்.


ஒப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ, ஒப்போ ஆர்எக்ஸ் 17 நியோவின்முக்கியம்சங்கள்

ஒப்போ ஆர்எக்ஸ் ப்ரோ ஆண்ட்ராய்டு 8.1ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்OS 5.2வில் இயங்குகிறது. இந்த போனில் இரட்டை சிம்களை பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்போனில் 6.4 இன்ச் திரை மற்றும் 19:9 சதவீத திரை மற்றும் கொரில்லா 6 பாதுகாப்பு கண்ணாடி உள்ளது. ஸ்னாப்டிராகன் 710 ஆக்டோ-கோரினால் இயங்குகிறது.

ஒப்போ ஆர் எக்ஸ் 17 ப்ரோவில் மூன்று கேமிராக்கள் உள்ளன. பின்பக்கத்தில் 12 மெகா பிக்சல் கேமிரா உள்ளது. ஒப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோவில் சூப்பர் விஓஓசி 3,700 பேட்டரி உள்ளது. 40 சதவீத பேட்டரி சார்ஜ் 10 நிமிடங்களில் ஏறிவிடும்.
 

opporx17neo main Oppo RX17 Neo

ஒப்போ ஆர்எக்ஸ் 17 நியோ

ஒப்போ ஆர்எக்ஸ் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டோ-கோரில் இயங்குகிறது. இதன் பின்புறத்தில் 16 மெகா பிக்சல் கேமிரா மற்றும் பின்புறத்திலிருக்கும் மற்றொரு கேமிரா 2 மெகா பிக்சலை கொண்டுள்ளது. கேமிராவில் எல்இடி பிளாஷ் உள்ளது. ஒப்போ ஆர்எக்ஸ் 17 நியோவில் 3,600 mAh பேட்டரி உள்ளது.
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.