பிப்ரவரி 6 ஆம் தேதி ஓப்போவின் கே1 வெளியாகப்போவதாக தகவல்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
பிப்ரவரி 6 ஆம் தேதி ஓப்போவின் கே1 வெளியாகப்போவதாக தகவல்!

சுமார் 4 இஞ்ச் நீளம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தனது 91% நீளத்தை ஸ்க்ரீனுக்கே ஓதிக்கியுள்ளது.

ஹைலைட்ஸ்
  • ஓப்போவின் டிஸ்சரை வெளியிட்ட ப்ளிப்கார்ட்!
  • அறிமுக விழா மற்றும் தேதியை உறுதி செய்த ப்ளிப்கார்ட் நிறுவனம்
  • கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஓப்போ நிறுவனத்தின் புதிய வெளியீடான ஓப்போ கே1 இந்தியாவில் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் வெளியாக தயாராகவுள்ளது.  ப்ளிப்கார்டில் ஸ்பெஷலாக வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனுக்காக தனியாக டிஸ்சர் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், குவால்கோம் ஸ்னாப்டிராகன் 660 மற்றும் இன்-டிஸ்பிளே கைவிரல் ரேகை பதிவு என பல அசத்தும் அப்டேட்டுகளுடன் சீனாவில் கடந்த ஆக்டோபர் மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 25 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவுடன் வருவதால் 20,000 ரூபாய் பட்ஜெட் போன்களுக்கு போட்டியாக வெளியாகியுள்ளது. நம்ப முடியாத விலையில் இந்த போன் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் விலைப்பட்டியலை இன்னும் வெளியிடாத நிலையில், 4ஜிபி ரேம் ரூபாய் 16,900 க்கு எதிர்பார்க்கப்படும் நிலையில் 6ஜிபி ரேம் ரூபாய் 19,000 க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மோச்சா ரெட் மற்றும் வான் கோக் புளூ நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் ப்ளிப்கார்டின் மூலமே வெளியிடப்படுகிறது.

oppo k1 india launch flipkart Oppo K1

இதன் சிறப்பு அம்சங்கள்:

அண்ட்ராய்டு 8.1-யில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 6.4 இஞ்ச் நீளம் கொண்டது. சுமார் 91% ஸ்க்ரீக்கே அதன் நீளத்தை ஒதுக்கியுள்ளது. மேலும் ஆக்டா-கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 660யில் இயங்கும் ஓப்போ கே1, 4 மற்றும் 6 ஜிபி ரேம்களை ஆப்ஷன்களாக கொண்டுள்ளது.

தெளிவான வீடியோ கால்களுக்கான 25 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா ஏற்கனவே இருக்கிற நிலையில் 16 மெகா பிக்சல் பின்புர கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்பில்டு 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனுக்கு 3,600mAh வரை பேட்டரி பவர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.