Oppo F9, Oppo F9 Pro இந்தியாவில் அறிமுகம்; விலை, சிறப்பம்சங்கள், சலுகை பற்றிய தகவல்கள்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
Oppo F9, Oppo F9 Pro இந்தியாவில் அறிமுகம்; விலை, சிறப்பம்சங்கள், சலுகை பற்றிய தகவல்கள்
ஹைலைட்ஸ்
 • F9, F9 Pro இரண்டுக்கும் ரேம் அளவில் மட்டுமே வேறுபாடு
 • F9 இல் 4 ஜிபி ரேம்; F9 Pro 6ஜிபி ரேம்
 • ஆகஸ்ட் 31 முதல் எஃப்9, எஃப்9 ப்ரோ விற்பனைக்கு வருகிறது

ஓப்போ F9 Pro, ஓப்போ F9 போன்கள் நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த வாரம் வியட்நாமில் இது முதன்முதலில் அறிமுகமானது. எஃப் 9, எஃப் 9 ப்ரோ இரண்டும் ஒரே போன்ற போன்களே என்றாலும் முன்னதில் 4ஜிபி ரேமும், பின்னதில் (Pro) 6ஜிபி ரேமும் இருக்கும். இத்திறன்பேசிகளின் சிறப்பம்சம் HDR வசதிகொண்ட இவற்றின் 25mp முன்பக்க கேமராவாகும். பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. ஐபோன் எக்ஸ் போன்ற V-வடிவ திரையும் இதன் மற்றொரு சிறப்பாகும். கேமராவுடன் கூகுள் லென்ஸ் சப்போர்ட்டும் கிடைக்கும் எனத் தெரிகிறது. இவைபோக செயற்கை நுண்ணறி (AI) அழகூட்டு தொழில்நுட்பமும் ஃபேஸ் அன்லாக் வசதிகளும் அடங்கியுள்ளன.

Oppo F9, F9 Pro விலை, சலுகைகள்:

இந்தியாவில் இதன் விலை 19,990 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஃப் 9 ப்ரோவின் விலை 23,990 ரூபாய். இரண்டிலும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி உள்ளது. Starry Purple, Sunrise Red, Twilight Blue என மூன்று கவர்ச்சியான நிறங்களில் இப்போன்கள் கிடைக்கும். ஃப்ளிப்கார்ட், அமேசான் இந்தியா, பேடிஎம் மால் தளங்களிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையகங்களிலும் ஆகஸ்ட் 31 முதல் இப்போன் விற்பனைக்கு வருகிறது. செவ்வாய் முதல் ஃப்ளிப்கார்ட்டில் இதன் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. முன்பதிவு விற்பனையில் ஜியோ (3.2 டிபி டேட்டா, 4900 ரூ மதிப்புள்ள இதர சலுகைகள், மேக் மை ட்ரிப்), இலவச ஸ்க்ரீன் ரிப்ளேஸ்மெண்ட், எஸ்பிஐ கிரெடிட், டெபிட் கார்டுகளில் 5% உடனடி கேஷ்பேக் ஆகிய சலுகைகள் கிடைக்கின்றன. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள், கூடுதல் கட்டணமற்ற சுலப மாதத்தவணை திட்டங்களிலும் இப்போனை வாங்கலாம்.

ஓப்போ F9, ஓப்போ F9 Pro திறன்குறிப்பீட்டு விவரங்கள்:

டூயல் சிம் (நானோ), ஆண்டிராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ColorOS 5.2, 6.3 முழு எச்டி டிஸ்பிளே (1080*2340 பிக்சல்கள்), 19:5:9 உயர அகலத் தகவு, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 SoC, 4 (அ) 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரி. இரட்டை பின்புற கேமரா (16mp f/1.8 & 2mp f/2.4). முன்புறத்தில் 25mp கேமரா (f/2.0, HDR). 120fps – 720p வரையிலான ஸ்லோ மோசன் வீடியோ பதிவு வசதிகள்.

64 இன்டர்னல் மெமரியைத் தனி மெமரி கார்டு மூலம் 256 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ளலாம். 4G VoLTE (இரு சிம்களிலும்), Wi-Fi 802.11ac, ப்ளுடூத் v4.2, GPS/ A-GPS, Micro-USB (OTG உடன்), 3.5மிமீ இயர்போன் ஜாக், accelerometer, ambient light sensor, digital compass மற்றும் proximity sensor போன்ற கனக்டிவிட்டி ஆப்சன்களை இப்போன் கொண்டுள்ளது.

அளவு 156.7x74x7.99மிமீ, எடை 169 கிராம். ஓப்போவின் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய 3,500mAh பேட்டரி.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. Amazon Sale : 100-க்கும் அதிகமான மொபைல்களுக்கு அமேசானில் அதிரடி விலைக்குறைப்பு!!
 2. முதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன? - முழு விவரம் உள்ளே!
 3. Redmi 8A செப்டம்பர் 25-ல் ரிலீஸ்: விலை, சிறபம்சங்கள் விவரம்!
 4. Flipkart Big Billion Days Sale 2019: எந்தெந்த போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!
 5. பல நாட்களாக எதிர்பார்த்தது… WhatsApp வெளியிட்டுள்ள புதிய Update!
 6. 6,000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட Samsung Galaxy M30s; ஆமோலெட் டிஸ்ப்ளே கொண்ட Samsung Galaxy M10s போன்கள் வெளியாயின: ஹைலைட்ஸ்!
 7. Stolen Mobile Phone: போன் திருட்டா அல்லது தொலைந்துவிட்டதா..? - இனி அரசே அதை கண்டுபிடித்து தரும்!
 8. Mi Band 4, Mi TV 65-இன்ச் இன்று அறிமுகமாக வாய்ப்பு- முழு விவரம் உள்ளே!
 9. OnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது!
 10. Smart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.