இந்தியாவில் ரிலீஸுக்குத் தயாராகும் 'ஓப்போ எஃப்11'!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் ரிலீஸுக்குத் தயாராகும் 'ஓப்போ எஃப்11'!

Photo Credit: Oppo

இரண்டு பின்புற கேமரா மற்றும் பாப் அப் செல்ஃபி கொண்டுள்ள ஓப்போ எஃப்11 விரைவில் இந்தியாவில் வெளியாகிறது!

ஹைலைட்ஸ்
  • பாப் ஆப் செல்ஃபி கேமராவை கொண்டுள்ள ஓப்போ எஃப்11
  • பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் கேமரா அமைந்துள்ளது.
  • வரும் மார்ச் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்பு!

‘உலக மொபையில் காங்கிரஸ் நிகழ்ச்சி' பார்சிலோனாவில் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் ஓப்போ நிறுவனம் தனது புதிய தயாரிப்பான 'எஃப்11 ப்ரோ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் மார்ச் 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது.

சீன நிறுவனமான ஓப்போ ஏற்கெனவே இந்த போனை பற்றிய பல முக்கிய தகவல்களான (பாப் ஆப் செல்ஃபி கேமரா, 48 மெகா பிக்சல் பின்புற கேமரா மற்றும் 3டி கிரேடியன்ட் காஸ்டிங்) போன்றவற்றை வெளியிட்ட நிலையில், இந்த போனை பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளது.

மும்பையில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகபடுத்தப் போவதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதன் விலை பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. டீசரில் வெளியான தகவலை வைத்து இந்த போன் லோ-லைட் வசமி, இரண்டு பின்புற கேமராக்கள் மற்றும் சூப்பர் நைட் மோட் உள்ளிட்டவைகளுடன் இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் திரையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், பின்புறத்தில் மட்டுமே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் இருக்கும் எனத் தகவல் கசிந்துள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.