இன்று ரிலீஸ் ஆகும் ஓப்போ எஃப் 11 ப்ரோ; தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இன்று ரிலீஸ் ஆகும் ஓப்போ எஃப் 11 ப்ரோ; தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

இந்தியாவில் இந்த போனின் சரியான விலை பற்றிய தகவல் இன்னும் கசியவில்லை!

ஹைலைட்ஸ்
  • மும்பையில் இன்று ஓப்போ எஃப் 11 ப்ரோ அறிமுகம் செய்யப்படவுள்ளது!
  • ஓப்போ எஃப் 11 ப்ரோ அமேசானில் விற்பனையாகவுள்ளது.
  • ஓப்போ எஃப் 11 ப்ரோ போனில் பாப்-அப் செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.

இன்று மும்பையில் நடைபெறும் விழாவில் சுமார் 6.30 மணிக்கு ஓப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. பாப் ஆப் கேமரா மற்றும் 48 மெகா பிக்சல் சென்சாருடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. லோ லைட் புகைப்படங்களுக்காக சூப்பர் நைட் மோட் வசதியைக் கொண்டு வெளியாகும் இந்தத் தயாரிப்பு இந்தியாவில்தான் முதலில் அறிமுகமாகுகிறது.

ஓப்போ எஃப் 11 ப்ரோ எதிர்பார்கப்படுகின்ற விலை:

இந்தியாவில் தனது அறிமுக விலையை பற்றிய தகவல் எதையும் ஓப்போ வெளியிடாத நிலையில், எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜேட் தயாரிப்பாக ரூ.15,000 முதல் ரூ.30,000-க்குள் இருக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது. இந்த போனில் 48 மெகா பிக்சல் கேமரா சென்சார் இடம் பெற்றுள்ளதால் அதிகப்படியான விலைக்கே வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அரோரா க்ரீன் மற்றும் தண்டர் ப்ளாக் நிறங்களில் விற்பனைக்கு வரும்.

ஓப்போ எஃப் 11 ப்ரோ எதிர்பார்கப்படுகின்ற அமைப்புகள்:

இதுவரை ஓப்போ நிறுவனம் சார்பாக வெளியாகியுள்ள தகவல்படி, இந்தத் தயாரிப்பில் இரண்டு பின்புற கேமராக்கள் உள்ளதாகவும் அவைகளில் 48 மெகா பிக்சல் சென்சாரும் 5 மெகா பிக்சல் சென்சாரும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போனில் பாப்-அப் செல்ஃபி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதன் சென்சார்களை பற்றிய தகவல் இன்னும் அறியப்படவில்லை. 6.5 இஞ்ச் ஹெச்டி திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு பைய் மற்றும் மீடியா டெக் ஹீலியோ P70 SoC போன்ற மென்பொருட்களுடன் வெளியாகும் என எதிர்பார்ப்பு

oppo f11 pro teaser 1

இதர அமைப்புகளாக பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியை இந்த ஓப்போ எஃப் 11 ப்ரோ தயாரிப்பு கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64/128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட தயாரிப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

பேட்டரி வசதியைப் பொறுத்தவரை 4,000mAh பவர் கொண்டிருக்கலாம் என அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. Stolen Mobile Phone: போன் திருட்டா அல்லது தொலைந்துவிட்டதா..? - இனி அரசே அதை கண்டுபிடித்து தரும்!
  2. Mi Band 4, Mi TV 65-இன்ச் இன்று அறிமுகமாக வாய்ப்பு- முழு விவரம் உள்ளே!
  3. OnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது!
  4. Smart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்!
  5. இந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்!
  6. Realme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்!
  7. இன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது?
  8. Vivo Z1x: பிளிப்கார்ட், விவோ தளங்களில் முதல் விற்பனை, முழு விவரங்கள் உள்ளே!
  9. ரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை?
  10. விலைக் குறைப்பை அடுத்து இந்தியாவில் எந்த iPhone எவ்வளவு விலை, முழு பட்டியல் இங்கே!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.