புதிய ஓன் பிளஸ் போனை நீங்களும் பெற வேண்டுமா? ஓன் பிளஸின் புதிய சவால்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
புதிய ஓன் பிளஸ் போனை நீங்களும் பெற வேண்டுமா? ஓன் பிளஸின் புதிய சவால்!

அடுத்த ஓஎஸ்-யின் டிசையினை வடிவமைக்கும் போட்டி!

ஹைலைட்ஸ்

ஓன் பிளஸ் நிறுவனம் தன் புதிய #PMChallenge அறிவித்துள்ளது.

ஆக்சிஜன் ஓஎஸ்-யை வடிவமைக்க உதவும் இந்த புதிய சவால்

வெற்றி பெரும் வாசகர்களுக்கு புதிய ஓன் பிளஸ் போன், பிரம்மாண்ட வரவேற்பு

ஓன் பிளஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சேலஞ்ச்  செய்துள்ளது. அதன்படி தனது ரசிகர்களிடம் தனது ஆக்சிஜன் ஓஎஸ் டிசைன் செய்யும் படி அழைப்பு விடுத்தது. மேலும் இதை ஒரு போட்டியாக அறிவித்தது.

அதன்படி இந்த போட்டியில் பங்கு பெறும் நபர்கள் தெளிவாக இந்த டிசைனை செய்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறவேண்டும். அப்படி பதிலளிக்கும் போது  ஓன் பிளஸ் நிறுவனம் அந்த ஐடியா எல்லா தடைகளையும் தாண்டி செயல்முறைக்கு பொருந்துமா என தேர்வு செய்வர்.

எல்லா சோதனைகளை தாண்டி வரும் டிசைனை செய்த நபருக்கு ஓன் பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட் போன் வெளியீடு விழாவில் பங்கேற்க வாய்ப்பும் விமானம் முதல் அனைத்து செலவுகளையும் நிறுவனம் ஏற்கும் என அறிவித்தது. அத்துடன் வெற்றி பெற்ற ஓஎஸ் வைத்து உருவாக்கப்பட்ட புதிய ஓன் பிளஸ் ஸ்மார்ட் போன் பரிசாக தரப்படும்.

இந்த போட்டியில் பங்குபெற விரும்புபவர்கள் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் தங்களது தயாரிப்புக்கு தேவையான பொருட்கள் அடங்கிய டாக்குமெண்ட் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் என அனைத்தையும் #PMChallenge என்ற ஹாஷ்டேகுடன் பதிவிடவும். வெற்றி பெற்ற ஓஎஸ் மாடல் வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

போட்டிக்கு நீங்க தயாரா?

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்