6-வது உலகளாவிய ஆண்டுவிழா கொண்டாட்ட விற்பனை: தள்ளுபடி விலையில் OnePlus போன்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
6-வது உலகளாவிய ஆண்டுவிழா கொண்டாட்ட விற்பனை: தள்ளுபடி விலையில் OnePlus போன்கள்!

OnePlus 7 Pro தள்ளுபடி செய்யப்பட்ட விலையான ரூ. 39,999-க்கு கிடைக்கிறது

ஹைலைட்ஸ்
  • OnePlus 7T-யின் விலை ரூ. 34,999-யாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
  • ரூ. 2,000 உடனடி தள்ளுபடியுடன் OnePlus 7 Pro கிடைக்கிறது
  • OnePlus விற்பனை Amazon, OnePlus online & offline stores-க்கு பொருந்தும்

ஒன்பிளஸ் தனது ஆறாவது ஆண்டு விழாவை உலகளவில் கொண்டாடுவதால், OnePlus 7T மற்றும் OnePlus 7 Pro இந்தியாவில் தள்ளுபடியைப் பெற்றுள்ளன. புதிய தள்ளுபடிகளுடன் ஒன்பிளஸ் 7T-யின் விலையை ரூ. 34.999. இதேபோல், OnePlus 7 Pro டிசம்பர் 17 செவ்வாய்க்கிழமை வரை நேரடி விற்பனையின் கீழ் தள்ளுபடி விலையையும் பெற்றுள்ளது. OnePlus 7 Pro, OnePlus 7T மற்றும் OnePlus 7T Pro ஆகியவற்றை வாங்கும்போது, முறையே  ரூ. 1,500, ரூ. 2,000, மற்றும் ரூ. 3,000 உடனடி தள்ளுபடியை ஒன்பிளஸ் வழங்குகிறது.  Amazon, OnePlus online store மற்றும் OnePlus experience stores மூலம் ஒன்பிளஸ் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஆறு மாதங்கள் வரை no-cost EMI ஆப்ஷன்களைப் பெறலாம்.


இந்தியாவில் OnePlus 7T-யின் விலை, விற்பனை சலுகைகள்:

ஆறாவது உலகளாவிய ஆண்டு விற்பனையின் கீழ், இந்தியாவில் OnePlus 7T-யின் விலை 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பிற்கு 34,999 ரூபாயாக தள்ளுபடி செய்யப்படுள்ளது. இது சமீபத்திய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விலையை விட ரூ. 3,000 மதிப்புள்ள தள்ளுபடி ஆகும். அதேபோல், OnePlus 7T-யின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலையான ரூ. 39.999-ல் இருந்து தள்ளுபடி விலையில் ரூ. 37,999-க்கு கிடைக்கிறது.  வாடிக்கையாளர்கள் HDFC வங்கி அட்டையைப் பயன்படுத்தி ரூ. 1,500 உடனடி தள்ளுபடியை பெறலாம்.

OnePlus 7T Review


இந்தியாவில் OnePlus 7 Pro-வின் விலை, விற்பனை சலுகைகள்:

OnePlus 7T போலவே, இந்தியாவில் OnePlus 7 Pro விலையும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிற்கு 42,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ. 52.999 ஆகும். OnePlus 7 Pro-வின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கும் தள்ளுபடி கிடைத்துள்ளது, இது சமீபத்திய விற்பனையின் கீழ் 39,999 ரூபாய்க்கு கிடைத்தது. மேலும், HDFC வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளில் ரூ. 2,000 மதிப்புள்ள உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

OnePlus 7 Pro Review


இந்தியாவில் OnePlus 7T Pro-வின் விலை, விற்பனை சலுகைகள்:

OnePlus 7T Pro-வைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 3,000 மதிப்புள்ள உடனடி தள்ளுபடியை பெறலாம். கூடுதலாக, எந்தவொரு ஒன்பிளஸ் 7-சீரிஸ் மாடலுக்கும் பதிலாக ரூ. 2,000 கூடுதல் கேஸ்பேக்கை வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஒன்பிளஸ் சாதனங்களை பரிமாறிக்கொள்கிறார்கள். மேலும், ஆறு மாதங்கள் வரை no-cost EMI ஆப்ஷன்கள் இல்லை.

OnePlus ஸ்மார்ட்போன் அசல் விலை (ரூ.) தள்ளுபடி விலை  (ரூ.)
OnePlus 7T 8+128GB 37,999 34,999
OnePlus 7T 8+256GB 39,999 37,999
OnePlus 7 Pro 6+128GB 48,999 39,999
OnePlus 7 Pro 8+256GB 52,999 42,999
OnePlus 7 Pro 12+256GB 57,999 53,999


நினைவுகூர, ஒன்பிளஸ் சமீபத்தில் தனது ஐந்தாண்டு கொண்டாட்ட விற்பனையை இந்தியாவில் நிறுவனத்தின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினமாக வடிவமைத்தது. ஷென்சென் (Shenzhen) சார்ந்த நிறுவனம் 2013 டிசம்பரில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது, அதே நேரத்தில் 2014 டிசம்பரில் இந்தியாவுக்கு வந்தது.
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.