‘அமேசான் சம்மர் சேல்’ விற்பனையில் தள்ளுபடி பெறும் போன்கள் யாவை!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
‘அமேசான் சம்மர் சேல்’ விற்பனையில் தள்ளுபடி பெறும் போன்கள் யாவை!

Photo Credit: Amazon India

அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மே 3 ஆம் தேதி, மதியம் 12 மணி முதலே இந்த விற்பனை ஆரம்பிக்கும்

ஹைலைட்ஸ்
  • பல முன்னணி ஸ்மார்ட் போன்களுக்கு இந்த சேலில் தள்ளுபடி கிடைக்கும்
  • மே 4 முதல் 7 வரை இந்த சேல் நடக்கும்
  • எஸ்.பி.ஐ கார்டு பயன்படுத்தினால் சிறப்பு ஆஃபர்கள் உண்டு

அடுத்த மாதத் தொடக்கத்தில் அமேசான் நிறுவனம் மீண்டுமொரு ‘சம்மர் சேல்' விற்பனையை ஆரம்பிக்க உள்ளது. மே 4 ஆம் தேதி ஆரம்பிக்கும் இந்த சேல், மே 7 ஆம் தேதி வரை நடக்கும். இந்த 4 நாட்கள் விற்பனையின்போது பல ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்ஸ், கேமராக்கள், ஆடியோ தயாரிப்புகள் உள்ளிட்டவைக்கு தள்ளுபடி கொடுக்கப்படும். இந்த அதிரடி விற்பனைக்காக அமேசான் நிறுவனம், ஒன்பிளஸ், ஆப்பிள், சாம்சங், ரியல்மி, ஓப்போ மற்றும் சியோமி நிறுவனங்களுடன் கைக்கோர்த்துள்ளது. அமேசானின் சொந்த தயாரிப்புகளுக்கும் இந்த விற்பனையில் தள்ளுபடி கொடுக்கப்பட உள்ளது. 

மொபைல் போன்களைப் பொறுத்தவரை இந்த விற்பனையின்போது 40 சதவிகிதம் வரை தள்ளுபடி கொடுக்கப்பட உள்ளது. ஒன்பிளஸ் 6T, ரெட்மி 6A, ரியல்மி U1, ஹானர் ப்ளே, விவோ நெக்ஸ், ஐபோன் X உள்ளிட்ட போன்களுக்கு இந்த சம்மர் சேலில் அதிக தள்ளுபடி கொடுக்கப்படும் என்று அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓப்போ F11 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி S10, விவோ V15 ப்ரோ, ஓப்போ F9 ப்ரோ, ஓப்போ R17 ப்ரோ ஆகிய போன்களுக்கு இந்த சேலின்போது சிறப்பு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் கொடுக்கப்பட உள்ளது. பல முன்னணி வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ வசதியும் இந்த சேலின் மூலம் வழங்கப்படும்.

சமீபத்தில் வெளியான ரெட்மி 7 மற்றும் ரெட்மி Y3 உள்ளிட்ட போன்களுக்கும் இந்த சம்மர் சேலின்போது தள்ளுபடி கொடுக்கப்பட உள்ளது. இந்த இரு போன்களுக்கு பெரிதாக தள்ளுபடி எதுவும் கொடுக்கப்படாது என்றாலும், எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் வாங்கினால், சிறப்புக் கழிவுகளைப் பெற முடியும். 

எஸ்.பி.ஐ டெபிட் கார்டு பயன்படுத்தி அமேசான் சம்மர் சேலில் போன் வாங்கினால் 10 சதவிகித கேஷ்-பேக் ஆஃபரும் கொடுக்கப்படும். 

அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மே 3 ஆம் தேதி, மதியம் 12 மணி முதலே இந்த விற்பனை ஆரம்பிக்கும். ப்ரைம் வாடிக்கையாளர்கள் இல்லயெனில், மே 4 ஆம் தேதி 12 மணிக்குதான் இந்த விற்பனையின் தள்ளுபடிகளை பெற முடியும்.

மேலும் கேமராக்களுக்கு 35 சதவிகதம் வரை தள்ளுபடியும், ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 60 சதவிகிதம் வரை தள்ளுபடியும், லேப்டாப்களுக்கு 70 சதவிகிதம் வரை தள்ளுபடியும், சமையல் சாதனப் பொருட்களுக்கு 70 சதவிகிதம் வரை தள்ளுபடியும், டிவி-க்களுக்கு 60 சதவிகிதம் வரை தள்ளுபடியும் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 


 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.