'மார்ச் மேட்னஸ் சேல்' ஓன்பிளஸ் 6Tக்கு மீண்டும் தள்ளுபடி வழங்கிய அமேசான்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
'மார்ச் மேட்னஸ் சேல்' ஓன்பிளஸ் 6Tக்கு மீண்டும் தள்ளுபடி வழங்கிய அமேசான்!

Photo Credit: அமேசான்

ஹைலைட்ஸ்
 • இந்தியாவில் ரூ.37,999க்கு ஓன்பிளஸ் 6T போன்கள் விற்கப்படுகின்றனர்.
 • இந்த போன் அண்டுராய்டு 9 பைய் அப்டேட்டை பெற்றுள்ளது.
 • அமேசான் மட்டுமின்றி ஜியோ நிறுவனமும் தள்ளுபடியை வழங்கியுள்ளது.

அமேசான் இந்தியா சார்பில் ஓன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனுக்கு மார்ச் மேட்னஸ் சேல் மூலம் புதிய தள்ளுபடி சேல் ஓன்றை நடத்தி வருகிறது. அமேசான் சார்பில் கேஷ்பேக் ஆஃபர்கள், கூடுதல் கட்டணமில்லா தவணை திட்டம் போன்ற பல ஆஃபர்களுடன் ஓன்பிளஸ் 6T விற்பனை செய்யப்படுகிறது. 

இன்று முதல் துவங்கியுள்ள இந்த சூப்பர் சேல், மார்ச் 17 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஓன்பிளஸ் 6T (6ஜிபி ரேம்/ 128ஜிபி சேமிப்பு வசதி) மாடல் போன் ரூ.37,999க்கு விற்பனை செய்யப்படுகிற நிலையில், ரூ.41,999க்கு (8ஜிபி ரேம்/ 128ஜிபி சேமிப்பு வசதி) மாடல் போன் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஓன்பிளஸ் 6T போனின் (8ஜிபி ரேம்/ 256ஜிபி சேமிப்பு வசதி) உடைய மாடல் ரூ.45,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த போன் வெளியாகியுள்ள நிலையில் மார்க்கெட்டில் இன்னும் விற்பனையில் கலக்கி வருகிறது.ஓன்பிளஸ் 6T (6ஜிபி ரேம்/ 128ஜிபி சேமிப்பு வசதி) ரூ.37,999 மாடல் போனை வாங்குபவர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக்கை அமேசான் பே பேலன்சாக வழங்க திட்டமிட்டுள்ளது. 

மேலும் ஆக்சிஸ் பேங்கு டெபிட் கார்டு மட்டும் டெபிட் கார்டு வைத்து இந்த போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனடி 5% தள்ளுபடி வழங்கவுள்ளது.மேலும் கூடுதல் கட்டணமில்லா தவணை திட்ட வசதியை பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்களுக்கு தருகிறது.அமேசானின் ஆஃபர்கள் மட்டுமின்றி ஓன்பிளஸ் 6T போனை வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,400 மதிப்புடைய உடனடி கேஷ்பேக் மற்றும் 3TB வரையுள்ள 4ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது.

ஓன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் 6.41-இஞ்ச் முழு ஹெச்டி அமோலெட் திரையை கொண்டுள்ளது. ஆக்டா-கோர் குவல்கம் ஸ்னாப்டிராகன் 845 SoC கொண்டுள்ள இந்த தயாரிப்பு இரண்டு பின்புற கேமராக்களுடன் வெளியாகுகிறது. 

20 மற்றும் 16 மெகா பிக்சல் கேமராக்கள் பின்புறத்தில் உள்ள நிலையில், செல்ஃபிக்காக முன்புறத்தில் 16 மெகா பிக்சல் கேமராவும் இடம்பெற்றுள்ளது. பேட்டரி வசதியை பொருத்தவரை 3,700 mAh பேட்டரி, டையிப்-சி ஸ்லாட் மற்றும் அண்டுராய்டு 9 பைய் ஆக்சிஜன் ஓ.எஸ்.-ம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. ஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது 'Redmi Note 8, Note 8 Pro' ஸ்மார்ட்போன்கள்!
 2. ஒரு விண்கல் பூமியைத் தாக்கும், தப்பிக்க வழிகள் இல்லை - எச்சரிக்கும் Elon Musk!
 3. 'Mi A3' ஸ்மார்ட்போனின் விலை என்ன, அறிமுகத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
 4. இந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்!
 5. 10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro!
 6. நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திராயன்-2: ISRO!
 7. நாளை அறிமுகமாகவுள்ள 'Mi A3' ஸ்மார்ட்போன், விலை இன்றே வெளியானது!
 8. புகைப்படங்களுடன் வெளியானது 'Redmi 8A' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!
 9. 'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின!
 10. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை உறுதி செய்த சியோமி அதிகாரி!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.