Flipkart வழியாக விற்பனைக்கு வந்தது Nubia Red Magic 3S!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
Flipkart வழியாக விற்பனைக்கு வந்தது Nubia Red Magic 3S!

Nubia Red Magic 3S பல சலுகைகளுடன் Flipkart-ல் கிடைக்கிறது

ஹைலைட்ஸ்
  • Nubia Red Magic 3S, 12GB வரை LPDDR4X RAM-ஐ பேக் செய்யும்
  • இந்த போன் 256GB வரை UFS 3.0 இண்டர்னல் ஸ்டோரெஜுடன் வருகிறது
  • internal cooling fan மற்றும் graphite sheet அம்சத்தைக் கொண்டதாகும்

Nubia Red Magic 3S கேமிங்-சென்ட்ரிக் போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது top-of-the-line hardware மற்றும் aggressive வடிவமைப்பைக் கொண்டுள்ளது. வாக்குறுதியளித்தபடி, Nubia Red Magic 3S இப்போது இந்தியாவில் no-cost EMI, வங்கி கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ் தள்ளுபடி போன்ற சில சலுகைகளுடன் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. 


இந்தியாவில் Nubia Red Magic 3S-ன் விலை:

இந்தியாவில் Nubia Red Magic 3S-ன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜின் ஆரம்ப விலை 35,999 ரூபாயாக உள்ளது. மேலும், 12GB RAM + 256GB ஸ்டோரேஜின் விலை ரூ. 47,999-க்கு Mecha Silver மற்றும் Cyber Shade நிறங்களில் கிடைக்கிறது.

தொலைபேசி இப்போது பிளிப்கார்ட்டில் no-cost EMI மூலம் பெறுவதோடு எக்ஸ்சேஞ் தள்ளுபடியில் ரூ. 10,800 வரை கிடைக்கும். மேலும், பிளிப்கார்ட் ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 5 சதவீத கேஷ்பேக் மற்றும் ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டுதாரர்களுக்கு சமமான தள்ளுபடியையும் வழங்குகிறது. எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்குவோருக்கு 10 சதவீதம் மதிப்புள்ள வங்கி தள்ளுபடி அட்டவணையில் உள்ளது.


Nubia Red Magic 3S-ன் விவரக்குறிப்புகள்:

டூயல் சிம் (நானோ) Nubia Red Magic 3S, Android 9 Pie-யால் இயங்குகிறது. 6.65-inch full-HD+ (1080x2340 pixels) AMOLED டிஸ்பிளேவுடன் 19.5:9 aspect ratio, 90Hz refresh rate மற்றும் 2.5D Corning Gorilla Glass protection ஆகிய அம்சங்கள் உள்ளன. 12GB RAM வரை இணைக்கப்பட்டு, Qualcomm Snapdragon 855+ SoC-யால் இயக்கப்படுகிறது. 

Nubia Red Magic 3S-ல் f/1.79 aperture உடன் 48-megapixel Sony IMX586 சென்சாரும் single rear கேமரா அமைப்பும் உள்ளது. முன்பக்கத்தில், f/2.0 aperture உடன் 16-megapixel Sony சென்சார் அம்சத்தைக் கொண்டுள்ளது. 256GB of inbuilt UFS 3.0 storage உடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. இணைப்பு ஆப்ஷனில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஆன்போர்டில், accelerometer, ambient light sensor, digital compass, gyroscope மற்றும் proximity செர்சார் ஆகிய சென்சார்கள் அடங்கும். rear panel-னில் fingerprint சென்சாரும் உள்ளது. 

Nubia Red Magic 3S-ல் 27W fast charging ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உள்ளது. 6 மணி நேரம் கேம்பிளேவை இந்த பேட்டரி வழங்குகிறது. மேலும், stereo-speakers, DTS:X audio support, 3D sound tech, touch-sensitive shoulder triggers, game boost button, distinctive RGB lighting இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. Nubia Red Magic 3S-ல் inbuilt cooling fan அமைப்புடன் liquid cooling உள்ளது. 171.7x78.5x9.65mm அளவீட்டையும், 215 கிராம் எடையையும் கொண்டது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.