'உலக மொபைல் காங்கிரஸ் 2019' நோக்கியா 9 ப்யூர் வியூ விலை என்ன தெரியுமா?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
'உலக மொபைல் காங்கிரஸ் 2019' நோக்கியா 9 ப்யூர் வியூ விலை என்ன தெரியுமா?

'உலக மொபைல் காங்கிரஸ் 2019' நிகழ்ச்சியில் நோக்கியா 9 ப்யூர் வியூ வெளீயிடு!

ஹைலைட்ஸ்
  • வரும் மார்ச் மாதம் முதல் முன்பதிவுக்கு வெளியாகும் நோக்கியா 9 ப்யூர் வியூ
  • உலக மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம்!
  • 20 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவுடன் வெளியான நோக்கியா 9 ப்யூர் வியை!

நோக்கியா 9 ப்யூர் வியூ (Pure View) பற்றி பல மாதங்களாக தொடர்ந்து தகவல்கள் கசிந்து வந்த நிலையில், பார்சிலோனாவில் நடந்துகொண்டிருக்கும் ' உலக மொபைல் காங்கிரஸ் 2019' நிகழ்சியில் இந்த போன் அறிமுகமானது.

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஓன் நிகழ்சியின் மூலம், நோக்கியா 9 ப்யூர் வியூ தனது பென்டா-லென்ஸ் கேமராக்களை அறிமுகம் செய்துள்ளது. கேமரா கட்டமைப்பைப் பொறுத்தவரை 2 மெகா பிக்சல் மோனோ குரோம் சென்சார், 12 மெகா பிக்சல் ஆர்ஜிபி சென்சார் இடம்பெற்றுள்ள நிலையில் பல முக்கிய அமைப்புகளுடன் வரும் மார்ச் மாதம் வெளியாகிறது இந்த போன்.

நோக்கியா 9 ப்யூர் வியூ விலைப் பட்டியல்:

ஹெச்எம்டி நிறுவனம் சார்பில் வெளியான தகவல்படி இந்த நோக்கியா 9 ப்யூர் வியூ இந்தியாவில் ரூபாய் 49,700 க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் வரும் மார்ச் மாதம் இந்த போன் விற்பனைக்கு வெளியாகி உள்ள நிலையில் இந்தியா மற்றும் இதர நாடுகளின் விலைப் பட்டியல் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

அத்துடன் நிறுவனம் சார்பாக தரப்பட்ட தகவல்கள்படி, நோக்கியா ப்யூர் வியூ மிட்நைட் ப்ளூ நிறத்தில் மட்டுமே வெளியாகும் எனத் தெரிகிறது.
 

nokia 9 pureview main Nokia 9 PureView

 


நோக்கியா 9 ப்யூர் வியூ அமைப்புகள்:


பலரால் எதிர்பார்கப்பட்ட நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன் தனது கேமராக்களுக்கு இம்முறை முத்துயத்துவம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குவால்கம் மற்றும் கூகுள் நிறுவனங்களுடன் இணைந்து கேமராக்களின் திறனை ஹெச்எம்டி நிறுவனம் உயர்தியுள்ளது.

மேலும் இந்த போனின் முக்கிய அம்சமாக இருக்கும் 5 பின்புற கேமராக்கள் ஜிசிஸ் லென்ஸ் நிறுவனத்தால் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 12 மெகா பிக்சல் மோனோ குரோம் சென்சார், 12 மெகா பிக்சல் ஆர்ஜிபி சென்சார் இடம்பெற்றுள்ளது.

இந்த கேமாரக்கள் மூலம், ஒரு நபர் படம் எடுக்கும்போது  5 லென்ஸுகளையும் பயன்படுத்தி ஒரு கொலாஜ் வகைப் படம் எடுக்க உதவும். செல்ஃபி கேமராவைப் பொறுத்தவரை முன்புறத்தில் 20 மெகா பிக்சல் செல்ஃபி ஸூட்டர் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 9 பைய், ஸ்னாப்டிராகன் 845 SoC உடன் வெளியாகும் நோக்கியா 9 ப்யூர் வியூ. மற்ற முக்கிய அமைப்புகளான 5.99 இஞ்ச் குவாட் ஹெச்டி திரை, போலெட் திரை (18:5:9) மற்றும் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சர் இந்த போனில் இடம்பெற்றுள்ளன.

நோக்கிய 9 ப்யூர் வியூ 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உட்கட்டமைப்பு  சேமிப்பு வசதியை இந்த கொண்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட், யுஎஸ்பி டைப் சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் 3,320mAh பேட்டரி வசதி போன்றவற்றை கூடுதலாக பெற்றுள்ளது இந்த போன். அத்துடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ் இருக்கும் என்றும் அதற்காகவே IP67 அங்கிகாரம் பெற்றுள்ளது எனவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : 'உலக மொபைல் காங்கிரஸ்' நிகழ்ச்சி 2019... நோக்கியாவின் புதிய அறிமுகங்கள்!

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.