இந்தியாவில் விலை குறைக்கப்பட்ட 'நோக்கியா 8.1', தற்போது இதன் மதிப்பு என்ன?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் விலை குறைக்கப்பட்ட 'நோக்கியா 8.1', தற்போது இதன் மதிப்பு என்ன?

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன்

ஹைலைட்ஸ்
 • 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு நோக்கியா 8.1-ன் விலை 19,999
 • முந்தைய விலையிலிருந்து 7,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது
 • ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்

இந்தியாவில் நோக்கிய 8.1 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 4GB RAM மற்றும் 6GB RAM என வெளியான அனைத்து வகை ஸ்மார்ட்போன்களும் விலை குறைப்பை பெற்றுள்ளது. இந்த விலைக்குறைப்பில் இதன் அடிப்படை மாடலான 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன், அதன் விலையிலிருந்து 7,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் உயர் ரக மாடலான 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விலையும் அதே அளவு விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் நோக்கியா ஆன்லைன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. மேலும், அமேசானிலும் இதே விலையில் விற்பனையாகவுள்ளது

நோக்கியா 8.1: விலை!

முன்னதாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன், இந்தியாவில் முதன்முதலில் 26,999 ரூபாய்க்கு அறிமுகமானது. ஆனால் இதன் தற்போதைய விலை 19,999 ரூபாய். 29,999 ரூபாய்க்கு அறிமுகமான 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட மற்றொரு வகையான நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விலை 22,999 ரூபாயக உள்ளது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை இதே அளவில் தான் உள்ளது. 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் 19,250 ரூபாய் எனவும், 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் 23,850 ரூபாய் எனவும் விற்பனையில் உள்ளது. 

ஸ்மார்ட்போன் புது விலை பழைய விலை விலை வித்தியாசம்
நோக்கியா 8.1 (4GB + 64GB) 19,999 ரூபாய் 26,999 ரூபாய் 7,000 ரூபாய்
நோக்கியா 8.1 (6GB + 128GB) 22,999 ரூபாய் 29,999 ரூபாய் 7,000 ரூபாய்

நோக்கியா 8.1: சிறப்பம்சங்கள்!

6.18-இன்ச் FHD+ திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் திரை 1080x2244 பிக்சல்களையும், 18.7:9 என்ற திரை விகிதத்தையும் கொண்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் 12 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. அதே நேரம் செல்பி எடுக்க 20 மெகபிக்சல் கேமரா உதவும்.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் 3500mAh பேட்டரியையும், 18W அதிவேக சார்ஜரையும் கொண்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. போட்டிக்கு போட்டி! வெறும் 98 ரூபாய்க்கு அதிரடி ரீசாஜ் ப்ளானை அறிவித்த ஜியோ!
 2. Vodafone Idea-வின் அதிரடி... குறைந்த விலையில் அறிமுகமான ரீசார்ஜ் பிளான்கள்!
 3. Samsung Galaxy S11+ -ல் 108-மெகாபிக்சல் சென்சாரா....?! முழுசா தெரிஞ்சுக்கோங்க....!
 4. இந்தியாவில் குவாட் ரியர் கேமராக்களுடன் வெளியானது Vivo V17!
 5. இந்தியாவில் இன்று வெளியாகிறது Vivo V17!
 6. Amazon, Vivo Site வழியாக அதிரடி சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் Vivo U20!
 7. டூயல்-ரியர் கேமராவுடன் வருகிறதா OnePlus 8 Lite....?! விவரங்கள் உள்ளே!
 8. Airtel-ஐ பின்பற்றும் Vodafone Idea! புதிய ப்ரீபெய்ட் ப்ளான்களைப் பற்றி தெரிஞ்சுகோங்க....!
 9. Android-ல் Call Waiting அம்சம்! WhatsApp-ன் அடுத்த அப்டேட்!
 10. Xiaomi Mi Super Sale: தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.