பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பும் நோக்கியா 8.1-ன் சிறப்பம்சம்சங்கள் என்னென்ன?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பும் நோக்கியா 8.1-ன் சிறப்பம்சம்சங்கள் என்னென்ன?

நோக்கியா 8.1 ஆண்ட்ராய்டு பையில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்
  • புதிய மொபைல் மாடல் குறித்து அறிவித்துள்ளது நோக்கியா
  • இந்த ஸ்மார்ட்போன் லஷ் ரெட் நிறத்தில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதன் விலை ரூ. 23,999 ஆக இருக்குமென்று வதந்திகள் பரவி வருகின்றன.

நோக்கியா 8.1 டிசம்பர் 5ல் நடைபெறவிருக்கும் ஹெச்.எம்.டி குளோபல் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நோக்கியா எக்ஸ்7-ல் 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ 18:7:9 என்ற வீதத்திலான திரை மற்றும் ஆக்டா கோர் குவால்கம் ஸ்நாப்டிராகன் 710 SoC- யைக் கொண்டுள்ளது.

இதில் இரட்டை டூயல் கேமரா செட்டப் உள்ளது. இதிலிருக்கும் செல்ஃபி கேமரா 20 மெகா பிக்சலைக் கொண்டுள்ளது.

நோக்கியா மொபைல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் நோக்கியா 8.1ன் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. ஒன்பது நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் புதிய நோக்கியா போனின் முழு உருவமும் காட்டப்படவில்லை. ஆனால், சிகப்பு நிற ரோஜாக்களின் மீது #ExpectMore என்று எழுதப்பட்டிருந்தது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நோக்கியா 9 மற்றும் நோக்கியா 2.1 பிளஸ் உடன் நோக்கியா 8.1 அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா எக்ஸ் 7 சீனாவில் கடந்த மாதம் அறிமுகமானது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் நோக்கியா 8.1 6ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.23,999 இருக்குமென்று தெரிவிக்கப்பட்டது. நோக்கியா எக்ஸ் 7 4ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் சீனாவில் அறிமுகமான போது அதன் விலை CNY 1,699. அதே போனில் 6ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட போன் CNY1,999 ஆகும்.
 

nokia 8 1 teaser twitter nokia mobile india Nokia 8.1

 

நோக்கியா 8.1னின் சிறப்பம்சங்கள்,

நோக்கியா எக்ஸ்7னின் குளோபல் வேரியண்டாக நோக்கியா 8.1 அறிமுகமாகிறது. நோக்கியா 8.1 ஆண்ட்ராய்டு பையில் இயங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 6.18 இன்ச் ஹெச்.டி+ 18.7:9 என்ற வீதத்திலான திரை மற்றும் 2.5டி குழிந்த கண்ணாடியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் குவால்கம் ஸ்நாப்டிராகன் 710 SoCயுடன் 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்கட்ட சேமிப்பு வசதி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

400ஜிபிக்கு வரை உள்ள மைக்ரோ எஸ்.டி கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். நோக்கியா 8.1ல் டூயல் கேமரா செட்டப் உள்ளது. இதில் 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 13 மெகா பிக்சல் செகண்டரி சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 20 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. நோக்கியா எக்ஸ்7ல் 3,500 mAh பேட்டரி இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்