'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின!

Photo Credit: NokiaPowerUser

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • நோக்கியா 7.2-உடன் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 5-ல் அறிமுகமாகலாம்
  • நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கலாம்
  • இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டிருக்கலாம்

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் குறித்து சமீபத்தில் வெளியான செய்திகள் மற்றும் வதந்திகள், இந்த ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகலாம், மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் என்னவாக இருக்கும் என்ற தகவல்களை கூறுகிறது. HMD குளோபல், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள IFA 2019 அறிமுக நிகழ்வில் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது. அந்த நிகழ்வில், நோக்கியா நிறுவனம் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தலாம், அவை நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஆகிய ஸ்மார்ட்போன்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. IFA நிகழ்வில் HMD குளோபல் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். 

சமீபத்தில் வெளியான வதந்திகளின்படி இந்த ஸ்மார்ட்போன் வட்ட வடிவிலான பின்புற கேமரா அமைப்பை கொண்டிருக்கலாம் என கூறுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் மெலிதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தகவல்களை நோக்கியா பவர் யூசர் (NokiaPowerUser)-தான் முதலில் வெளியிட்டது.

நோக்கியா 7.2 ஸ்மார்டாபோனின் பின்புற கேமரா அமைப்பிற்கு கீழ், பிங்கர் பிரின்ட் சென்சார் இடம்பெற்றிருக்கலாம் என்பதை சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன், ஸ்னேப்ட்ராகன் 660 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நோக்கியா பவர் யூசர் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் ஒரு சிம் வசதி கொண்டே வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறிப்பாக 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு என்ற ஒரே வகையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சார்கோல் (Charcoal) வண்ணத்தில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் அளவிலான திரையை கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனும், நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் போன்றே அமைப்புகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

HMD குளோபல், நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2, ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களையும் செப்டம்பர் 5 நடைபெறவுள்ள IFA நிகழ்வில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாகவே, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தோனேசியாவில் ஆங்கீகாரம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.