நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் அறிமுகமானது - விலை 15,999 ரூபாய்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் அறிமுகமானது - விலை 15,999 ரூபாய்

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்ஃபோனை இந்தியாவில் இன்று அறிமுகமானது. ஹெச்.எம்.டி குளோபல் தயாரிப்பில், புதிய தலைமுறை ஸ்மார்ட்ஃபோனாக இந்த நாட்ச் டிஸ்பிளே 6.1 பிளஸ் விற்பனைக்கு வந்துள்ளது.

கடந்த மாதம் ஹாங்காங்கில் முதல் முறையாக நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்ஃபோன் விற்பனைக்கு வந்தது. சீனாவில் அறிமுகமான நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்ஃபோனின், சர்வதேச மாடலாக 6.1 பிளஸ் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ராய்டின் அப்டேட்கள் பெறவும் தகுதி பெற்றிருக்கிறது. 

நோக்கியா 6.1 பிளஸ் இந்தியாவில் விலை:

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்ஃபோனின் விலை 15,999 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் நோக்கியா ஆன்லைன் ஸ்டோரிலும் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. ப்ரீ ஆர்டர் இன்று முதல் தொடங்குகிறது. 

நோக்கியா 6.1 சிறப்பம்சங்கள்: 

இரண்டு சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 5.8 இன்ச் முழு ஹெச்.டி கார்னிங் கொரில்லா கிளாஸோடு டிஸ்பிளே வருகிறது. ஆக்டாகோர் 630 பிராசஸரும் 4ஜி,பி ரேமும் இதில் இருக்கிறது. 64 ஜி.பி ஃபோன் மெமரியும், எஸ்.டி கார்டு மூலம் 400 ஜி.பி அளவுக்கு ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளவும் முடியும். 

டூயல் கேமரா அம்சமும் இந்த ஸ்மார்ட்ஃபோனில் கொடுக்கப்பட்டிருக்கிறது. பின் பக்கத்தில், 16 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் சென்சார் கொண்டிருக்கிறது இந்த டூயல் கேமரா. பின் பக்கத்தில் டூயல் டோன் ஃபிளாஷும் உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகா பிக்சல் கேமரா சென்சார் இடம் பெற்றுள்ளது. 

நெட்வொர்க் தொடர்பை பொறுத்தவரை 4ஜி எல்.டி.இ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.0, யூ.எஸ்.பி, ஜி.பி.எஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் இதில் உள்ளது. 5000mAh பேட்டரியும் இதன் சிறப்பம்சம். பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சாரும் உள்ளது.

ஆக்சலரோமீட்டர், லைட் சென்சார், டிஜிட்டல் காம்பஸ், கைரோஸ்கோப், பிராக்ஸிமிட்டி சென்சார் ஆகிய சென்சார்களும் இதில் அடக்கம். 3060mAh பேட்டரியும் இதன் சிறப்பம்சம். இந்த மொபைலின் எடை 151 கிராம்கள். 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.