இந்தியாவில் தொடர் விலை சரிவை சந்தித்து வரும் நோக்கியா!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் தொடர் விலை சரிவை சந்தித்து வரும் நோக்கியா!

நோக்கியா 6.1 மற்றும் 3.1 போன்களின் விலை சரிவு!

ஹைலைட்ஸ்
  • நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் சரிவு!
  • நோக்கியா 3.1 மற்றும் 5.1 போன்கள் 2000 ரூபாய் வரை விலை சரிவு!
  • கடந்த ஆண்டு வெளியான இரண்டு போன்களும் தற்போது விலை குறைந்து காணப்படுகிறது.

ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனத்திற்கு சொந்தமான நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 6.1 ஆகிய போன்களின் விலைகள் இந்தியாவில் தற்போது குறைந்துள்ளது.

நோக்கியா 3.1 பிளஸ் போனின் விலை குறைந்துள்ள நிலையில் தற்போது நோக்கியா 3.1 மற்றும் 6.1 போன்களின் விலையும் குறைந்துள்ளது. ரூபாய் 8,228 ஆக இருந்த நோக்கியா 3.1 போனும், ரூபாய் 11,498 ஆக இருந்த நோக்கியா 6.1 போனும் விலை குறைந்துள்ளன.

மேலும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ரூபாய் 14,789 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி நினைவகம் கொண்ட நோக்கியா 3.1 சுமார் 11,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1000 ரூபாய் குறைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து 2000 ரூபாய் வரை விலை குறைந்ததால் 8,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் விலை குறைந்துள்ளது. மேலும் 5.2 இஞ்ச் உயரம் கொண்ட ஹெச்.டி. ஸ்க்ரீன் மற்றும் 13 மெகாபிக்சல் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது அண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது.

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 16,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டு, தொடர்ந்து விலைச்சரிவை கண்டது. அதைப்போல் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனும் விலைச்சரிவை சந்தித்து வருகிறது. நோக்கியா 6.1 வகை ஸ்மார்ட்போன் வெளியானபோது அண்ட்ராய்டு ஓரியோவில் இயங்கிய நிலையில் தற்போது 9.0 பையில் இயங்குகிறது.

5.5 இஞ்ச் உயரம் உள்ள இந்த ஸ்மார்ட்போன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் தற்போது அதிரடி விலை சரிவை சந்தித்துள்ளது.
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.