புதுப் பொலிவுடன் வரும் நோக்கியா போன்ஸ் ‘நோக்கியா 220 4ஜி, நோக்கியா 105’- முழு விவரம் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
புதுப் பொலிவுடன் வரும் நோக்கியா போன்ஸ் ‘நோக்கியா 220 4ஜி, நோக்கியா 105’- முழு விவரம் உள்ளே!

எச்.எம்.டி க்ளோபல், நோக்கியா 105 போனை, சுமார் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்
  • தற்போது வெளிவருவது 4வது தலைமுறை '105' ஆகும்
  • முதன்முதலா நோக்கியா 105, 2013-ல் அறிமுகமானது
  • நோக்கியா 220, முதன்முதலாக 2014-ல் அறிமுகம் செய்யப்பட்டது

நோக்கியாவின் பழைய போன்களான நோக்கியா 105 மற்றும் நோக்கியா 220 போன்கள் மீண்டும் சந்தையில் என்ட்ரி கொடுக்க உள்ளன. இதில் நோக்கியா 220, 4ஜி சப்போர்ட் உடன்  வந்துள்ளது. அடுத்த மாதம் இந்த இரு போன்களும் விற்பனை செய்யப்படும் என்று எச்.எம்.டி க்ளோபல் நிறுவனம் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது. நோக்கியா 105, 3 வகை வண்ணங்களில் கிடைக்கும். நோக்கியா சீரிஸ் 30+ மென்பொருள் மூலம் இந்த போன் இயங்கும். நோக்கியா 220 4ஜி போன், முற்றிலும் புதிய டிசைனில் வெளிவரும். 

நோக்கியா 105 போன், கடந்த 2013 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. 1.45 இன்ச் டி.எப்.டி ஸ்க்ரீன், 128x128 பிக்சல் ரெசலுயூஷன், நோக்கியா சீரிஸ் 30 மென்பொருள், 35 நாட்கள் நீடிக்கும் திறன் கொண்ட 800 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகளை இந்த நோக்கியா 105 பெற்றிருக்கும். 

நோக்கியா 220, 2014 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்த போன் 4ஜி சப்போர்ட் உடன் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுளது. 4ஜி சப்போர்ட் தவிர இந்த போனில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

நோக்கியா 105, நோக்கியா 220 4ஜி விலை:

எச்.எம்.டி க்ளோபல், நோக்கியா 105 போனை, சுமார் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீலம், பிங்க் மற்றும் கருப்பு நிறங்களில் ஆகஸ்ட் முதல் இந்த போன் விற்பனை செய்யப்படும். சர்வதேச அளவில், எந்த சந்தையில் இந்த போன் முதலில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல் இல்லை. நோக்கியா 220 4ஜி, சுமார் 3,000 ரூபாய்க்கு விற்கப்படும். ஆகஸ்ட் நடுவாக்கிலிருந்து இந்த போன் கிடைக்கும். நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் 220-ஐ வாங்க முடியும். 

நோக்கியா 105, நோக்கியா 220 4ஜி சிறப்பம்சங்கள்:

நோக்கியா 105-ல், 1.77 இன்ச் ஸ்க்ரீன், சீரிஸ் 30+ மென்பொருள் வசதி இருக்கும். மைக்ரோ யு.எஸ்.பி 1.1 போர்ட், 2ஜி கனெக்டிவிட்டியையும் இந்த போன் பெற்றுள்ளது. எப்.எம் ரேடியோ வசதியுள்ள இந்த போனில் 800 எம்.ஏ.எச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், மினி சிம் ஸ்லாட் (சில சந்தைகளில் டூயல் சிம் சப்போர்ட் இருக்கும்) உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் இடம் பெற்றிருக்கும். 

நோக்கியா 220 4ஜி போனில் 2.4 இன்ச் ஸ்க்ரீன், ஃபீச்சர் மென்பொருள் வசதி இருக்கும். இதைத் தவிர மைக்ரோ யு.எஸ்.பி 2.0 போர்ட், நானோ சிம் கார்டு ஸ்லாட் (சில சந்தைகளில் டூயல் சிம் சப்போர்ட் உடன் வரும்), 4ஜி சப்போர்ட், ப்ளூடூத் 4.2, பின்புற வி.ஜி.ஏ கேமரா, 1,200 எம்.ஏ.எச் பேட்டரி, எப்.எம் ரேடியோ, 3.5 எம்.எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளது. 


 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.