தற்போது விற்பனையில் மோட்டோரோலா ‘ஒன் விஷன்': முழு விவரம் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
தற்போது விற்பனையில் மோட்டோரோலா ‘ஒன் விஷன்': முழு விவரம் உள்ளே!

முன்னதாக சபையர் (Sapphire Gradient) வண்ணம் கொண்ட 'ஒன் விஷன்' மட்டுமே விற்பனையானது.

ஹைலைட்ஸ்
  • இந்த 'ஒன் விஷன்' ஸ்மார்ட்போன் விலை 19,999 ரூபாய்
  • 17,900 ரூபாய் வரை ஃப்ளிப்கார்ட்டில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள்
  • இரு வண்ணங்களில் தற்போது விற்பனையாகிறது

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமான  மோட்டோரோலா ‘ஒன் விஷன்', கடந்த ஜூன் 27 அன்று விற்பனைக்கு வந்தது. வெண்கலம் (Bronze Gradient) மற்றும் சபையர் (Sapphire Gradient) என இரு வண்ணங்களை கொண்டு அறிமுகமானது இந்த ஸ்மார்ட்போன். ஆனால், அன்றைய விற்பனையில் சபையர் (Sapphire Gradient) வண்ணம் கொண்ட 'ஒன் விஷன்' மட்டுமே விற்பனையானது. இன்னிலையில், மற்றொரு வண்ணமான வெண்கல (Bronze Gradient) நிற வண்ணம் கொண்ட 'ஒன்விஷன்' ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட்டில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது, ஃப்ளிப்கார்ட்டில் இரண்டு வண்ணங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். 

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்' ஸ்மார்ட்போன், ஒரே ஒரு வகையில் மட்டுமே அறிமுகமானது. 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது இந்த வகை. இந்த 'ஒன் விஷன்' ஸ்மார்ட்போன் இந்தியாவில் 19,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது.

மோட்டோரோலா ‘ஒன் விஷன்': சிறப்பம்சங்கள்.

இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்ட் 9 பை (Android 9 Pie) அமைப்பு கொண்டு செயல்படுகிறது. சாம்சங் ஆக்டா-கோர் எக்சினோஸ் 9609 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 2.2GHz வேகத்தில் செயல்படும்.

6.3 இன்ச் அளவிலான இதன் திரை FHD+ (1080x2520 பிக்சல்கள்) திரையாகவே அறிமுகமாகியுள்ளது. மேலும் 21:9 திரை விகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ளது. முக்கியமாக, இதன் திரை 'ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே' என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன், ஃபேஸ் அன்லாக் வசதியையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இரண்டு பின்புற கேமராக்கள் கொண்டுள்ளது இந்த 'ஒன் விஷன்', 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் அளவிலான மற்றோரு கேமரா. செல்பிக்களுக்காக, இதன் முன்புறத்தில் 25 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

3,500mAh பேட்டரி அளவுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 15W டர்போபவர் சார்ஜர் வசதியையும் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G LTE, வை-பை, ப்ளூடூத் 5.0, பின்புற ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், டோல்பி ஆடியோ என மற்ற வசதிகளை கொண்டுள்ளது.180 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 160.1x71.2x8.7mm என்ற அளவை கொண்டு கொண்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.