'மோட்டோ Z4' போனின் தகவல்கள் கசிவு... முழு விபரம் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
'மோட்டோ Z4' போனின் தகவல்கள் கசிவு... முழு விபரம் உள்ளே!

Photo Credit: 91மொபைல்ஸ்

சமீபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் இந்த புதிய ஸ்மார்ட்போன் எட்ஜ்-டூ-எட்ஜ் திரை, வாட்டர் டிராப் நாட்சையும் பெற்றிருப்பதாக கூறப்பட்டது.

ஹைலைட்ஸ்
  • வாட்டர் டிராப் நாட்சை கொண்ட மோட்டோ Z4 ஸ்மார்ட்போன்!
  • மேலும் இந்த போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 855 SoC-யை பெற்றுள்ளது.
  • 16 பின் போகோ இனைப்பாளரை இந்த போன் பொற்றுள்ளதாக தகவல்!

மோட்டோரோலா தயாரிப்பில் வெளியான Z வரிசை போன்கள், பெரிதாக எவ்வித அப்டேட்டையும் பெறாமல் இருந்தன. இந்நிலையில், தற்போது மோட்டோ Z4 போன் குறித்து தகவல் கசிந்துள்ளது.

தொடர்ச்சியாக இந்த புதிய தயாரிப்பைப் பற்றிய தகவல்கள் கசிந்து வரும் நிலையில் போனின் டிசைன் பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை. மேலும் வெளியான தகவல்படி, இந்த புதிய மோட்டோ Z4 போனும் மோட்டோ Z3 போனின் டிசைனை கொண்டிருக்கும் என எதிர்பார்கப்படுகின்றது.

சமீபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் இந்த புதிய ஸ்மார்ட்போன் எட்ஜ்-டூ-எட்ஜ் திரை, வாட்டர் டிராப் நாட்சையும் பெற்றிருப்பதாக கூறப்பட்டது.

மோட்டோ Z4 போனில் இடம்பெற்றுள்ள இந்த நாட்ச் இந்தியாவில் வெளியாக உள்ள மோட்டோ ஜி7 போனில் இடம் பெற்றுள்ள நாட்சை விட சிறியதாகவே இருக்கும் எனப்படுகிறது.

மோட்டோ Z4 போன், சோனி சென்சாரை கொண்ட 48-மெகா பிக்சல் கேமரா மற்றும் 16 பின் போகோ இணைப்பு கேமராவைப் பெற்றுள்ளதாக தகவல். இந்தத் தகவல் கசிவின் மூலம் மோட்டோ தனது டிசைன் மாடல்களில் மாற்றும் ஏதும் கொண்டு வர விரும்பவில்லை என்பது தெரிகிறது.

பின்புறத்தில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் அமைந்திருப்பது போல் எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில் இந்த போன் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் வசதியை பெற்றிருக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் வெளியான தகவல்படி, இந்த மோட்டோ Z4 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 SoC இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்த புதிய தயாரிப்பில் ஆண்ட்ராய்டு 9 பைய், டைப் சி சார்ஜிங் கேபிள் மற்றும் 3.5mm ஹெட்போன் சாக்கேட் போன்றவை இடம் பெற வாய்ப்புள்ளன. மோட்டோ Z4 பற்றிய தகவல் கசிவுகள் வெளியானாலும் இந்த ஆண்டு எப்படியும் சந்தைக்கு வர வாய்பில்லை என மோட்டோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.