விரைவில் வருகிறது ஜி6 பிளஸ் - டீசர் வெளியிட்டது மோட்டோரோலா

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
விரைவில் வருகிறது ஜி6 பிளஸ் - டீசர் வெளியிட்டது மோட்டோரோலா

 

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்ஃபோன் கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதைக் குறிக்கும் வகையில் மோட்டோரோலா நிறுவனம், ஜி6 பிளஸின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் பிரேசிலில் ஜி6 மற்றும் ஜி6 பிளேவுடன், முதலில் விற்பனைக்கு வந்த இந்த ஸ்மார்ட்ஃபோன் இப்போது இந்தியாவுக்கு வருகிறது. ஜி6 மற்றும் ஜி 6 பிளேவை விட, ஜி 6 பிளஸில் பெரிய டிஸ்பிளே, அதிக ரேம் மற்றும் அதிக திறன் கொண்ட பிராசஸரும் உள்ளது.

மோட்டோ ஜி6 பிளஸ் விலை:

முதலில் விற்பனைக்கு வரும்போது ஜி6 பிளஸ் 299 யூரோக்களாக ( ரூ 24,350) ஆக நிர்ணயிக்கப்பட்டது. அந்நிறுவனம் இந்தியாவில், இதன் விலை குறித்து வேறு எந்த தகவலையும் வெளியிடாமல் வைத்திருக்கிறது.

மோட்டோ ஜி6 பிளஸ் சிறப்பம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்ஃபோனில் 5.9 முழு ஹெச்.டி திரை கொண்டது. ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2.2 ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸரில் இயங்குகிறது. 4ஜி.பி ரேமும் இதில் உள்ளது. 

இதன் டூயல் கேமராவில் 12 மெகா பிக்ஸல் மற்றும் 5 மெகா பிக்ஸல் சென்ஸார்கள் உள்ளன. மேலும் டூயல் லென்ஸ் எல்.இ.டி ஃபிளாஷும், முன் பக்க செல்ஃபி ஃபிளாஷும் உள்ளது. 

இதன் ஃபோன் மெமரி 64ஜி.பி. 128 ஜி.பி வரை நீட்டித்துக் கொள்ளலாம். இதன் பேட்டரி திறன் 3200 mAh. கூடுதலாக டர்போ பவர் அம்சமும் இருக்கிறது. 7 மணி நேரத்துக்கான சார்ஜை 15 நிமிடத்தில் பெறலாம். இண்டிகோ மற்றும் தங்க நிறத்தில் இந்த ஸ்மார்ட்ஃபோன் கிடைக்கும்.
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.