நீண்ட காத்திருப்புக்கு பின் மோட்டோவில் வெளியானது ஓரியோ அப்டேட்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
நீண்ட காத்திருப்புக்கு பின் மோட்டோவில் வெளியானது ஓரியோ அப்டேட்!
ஹைலைட்ஸ்
 • ஒருவழியாக ஓரியோ அப்டேட் பெரும் மோட்டோ ஜி4 பிளஸ்
 • சுமார் 17 மாதங்களுக்கு பிறகு இந்த அப்டேட் வெளியாகியுள்ளது
 • மோட்டோ Z3 ஃப்ளே போனுக்கு விரைவில் அண்டிராய்டு பைய் அப்டேட்

மோட்டோரோலா நிறுவனம் ஒருவழியாக தனது ஜி4 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ஆண்டிராய்டு 8.1 அப்டேட்டை வழங்கியுள்ளது. பெரும்பாலமான போன்களுக்கு ஆண்டிராய்டு பைய் அப்டேட் வந்துவிட்ட நிலையில் இப்போதுதான் மோட்டோ ஜி4  பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ஓரியோ அப்டேட் கிடைக்கிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த அப்டேட் வெளியாகும் என வந்த தகவலை தொடர்ந்து பலர் இந்த புதிய அப்டேட்டை எதிர்பார்த்து இருந்தனர். அதனால் நீங்கள் ஒரு மோட்டோ ஜி4 போனின் உரிமையாளராக இருந்தால் உங்களுக்கு விரைவில் அப்டேட் கிடைக்க உள்ளது. 

அதே சமையத்தில் மோட்டோவின் சமீபத்திய தயாரிப்பான Z3 ஃப்ளே ஸ்மார்ட்போனுக்கு ஆண்டிராய்டு பைய் அப்டேட் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஓரியோ அப்டேட்டின் போது மோட்டோ ஜி4 மற்றும் ஜி4 பிளஸ் போன்களை இணைக்கவில்லை.

அதைத்தொடர்ந்து நிர்வாகம் சார்பில் ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக இந்த அப்டேட் வெளியாகவில்லை என்றும் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விரைவான அப்டேட் 17 மாதங்கள் கழித்தே வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் மோட்டோவின் மற்ற தயாரிப்புகளான மோட்டோ Z3 ஃப்ளே மற்றும் மோட்டோ Z ஆகிய 8 போன்களுக்கு விரைவில் ஆண்டிராய்டு 8 அப்டேட் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. Stolen Mobile Phone: போன் திருட்டா அல்லது தொலைந்துவிட்டதா..? - இனி அரசே அதை கண்டுபிடித்து தரும்!
 2. Mi Band 4, Mi TV 65-இன்ச் இன்று அறிமுகமாக வாய்ப்பு- முழு விவரம் உள்ளே!
 3. OnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது!
 4. Smart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்!
 5. இந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்!
 6. Realme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்!
 7. இன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது?
 8. Vivo Z1x: பிளிப்கார்ட், விவோ தளங்களில் முதல் விற்பனை, முழு விவரங்கள் உள்ளே!
 9. ரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை?
 10. விலைக் குறைப்பை அடுத்து இந்தியாவில் எந்த iPhone எவ்வளவு விலை, முழு பட்டியல் இங்கே!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.