கிழே விழும்போது மொபைலை பாதுகாக்கும் 'ஏர் பேக்' மொபைல் கவர்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
கிழே விழும்போது மொபைலை பாதுகாக்கும் 'ஏர் பேக்' மொபைல் கவர்

ஜெர்மனியைச் சேர்ந்த என்ஜினியரிங் மாணவர் ஒருவர், மொபைல் ஃபோன்களுக்கான ஏர் பேக்குகளை ஃபோன் கவரை உருவாக்கியுள்ளார். மொபைல் கீழே விழுந்தால், கவரில் உள்ள ஸ்பிரிங்க் தானாக விரிந்து, மொபைல் அடிபடாமல் பாதுகாக்கிறது. இந்த புதிய வகை மொபைல் கவருக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

ஆலென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிலிப் ஃபிரென்சில் என்ற மாணவர், தனது ஃபோன் கீழே விழுந்து உடைந்ததால் இந்த ஏர்பேக் மொபைல் கவரை உருவாக்கும் என்ணம் கிடைத்திருக்கிறது. அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார். சிறிய, கனமற்ற ஃபோன் கவரை உருவாக்க வேண்டும் என அவர் தேடுதலை தொடங்கியிருக்கிறார். 4 ஆண்டுகள் தொடர் முயற்சிக்கு பிறகு, ஆக்டிவ் டாம்பிங் என்ற பெயரில் இந்த ஏர் பேக் மொபைல் கவரை அவர் முழுவதுமாக உருவாக்கியிருக்கிறார்.

இந்த மொபைல் கவரில் சென்சார் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். மொபைல் கீழே விழும்போது, அந்த சென்சார், 4 ஸ்பிரிங்குகளை தட்டிவிட்டு மொபைலை எந்தவித டேமேஜும் இன்றி காக்கும்.

இந்த மொபைல் கவர் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இதற்கான காப்புரிமையை பிலிப் பெற்றுள்ளார். பிலிப்பின் இந்த கண்டுபிடிப்பை பாராட்டி ஜெர்மனி சொஸைட்டி ஆஃப் மெக்கட்டிரானிக்ஸ் அமைப்பு விருதளித்திருக்கிறது. பிற்காலத்தில் நம் அனைவரின் கைகளிலும், பிலிப்பின் இந்த ஏர் பேக் மொபைல் கவர்கள் தவழும் என்று எதிர்பார்க்கலாம்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்