விற்பனைக்கு தயாராகும் எம்.ஐ சவுண்டு பார்... தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
விற்பனைக்கு தயாராகும் எம்.ஐ சவுண்டு பார்... தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்!

சியோமியின் புதிய சவுண்டு பார், இந்தியாவில் ரூ.4,999 க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழனன்று சியோமியின் புதிய தயாரிப்பான எம்.ஐ- யின் சவுண்டு பார் இந்தயாவில் அறிமுகப் படுத்தப்பட்டது. Mi LED TV 4X Pro 55 இஞ்ச் டிவி சமீபத்தில் வெளியாகிய நிலையில் தற்போது வெளியாகும் இந்த புதிய சவுண்டு பார் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெறும் முப்பதே விநாடிகளில் இந்த சவுண்டு பாரை, பக்காவாக பொருத்தி பாட்டு கேட்டு என்ஜாய் செய்ய முடியும் என்று சியோமி நிறுவனம் கூறுகிறது. 20 மிமீ டூம் ஸ்பீக்கர்களுடன் சியோமியின் சவுண்டு பார் வடிவமைக்கப்பட்டுள்ளது. எம்.ஐ நிறுவனத்தின் எல்.யி.டி டிவியுடன் இந்த சவுண்டு பார் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இந்தியாவில் ரூ. 4,999க்கு  விற்பனை செய்யப்படும் இந்த சவுண்டு பார், வரும் ஜனவரி 16 முதல் எம்ஐ.காம் மற்றும் இதர துணை விற்பனை தளங்களிலும் விற்பனைக்கு வரும்.xiaomi mi soundbar connectivity xiaomiடிவி மற்றும் மடிக்கணினிகளுடன் பொருத்தப்படும் இந்த சவுண்டு பார்க்கு ப்ளூ-டூத் மற்றும் 3.5 மில்லி மீட்டர் நீளம் கொண்ட ஆக்ஸ் கேபிள் போன்ற அமைப்புகளுடன் வெளியாகியிருக்கிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்