நவம்பர் 6-ல் ரிலீஸாகும் Mi Note 10!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
நவம்பர் 6-ல் ரிலீஸாகும் Mi Note 10!

Photo Credit: Twitter/ Xiaomi

Mi Note 10 கேமரா அமைப்பு முறையான அறிவிப்புக்கு முன்னதாக ஜியோமி விவரித்துள்ளது

ஹைலைட்ஸ்
  • Mi Note 10, 108-megapixel முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும்
  • ஸ்பெயினின் மாட்ரிட்டில் ஜியோமி இந்த அறிமுகத்தை நடத்துகிறது
  • Mi Note 10, Qualcomm Snapdragon 730G உடன் வரலாம்

Mi Note 10 நவம்பர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக ஜியோமி தனது சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளது. Mi Note 10 வெளியீடு ஸ்பெயினின் (Spain) மாட்ரிட்டில் (Madrid) நடைபெறும் என்று சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்திய டீஸர்களில், ஜியோமி, Mi Note 10 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா மூலம் அறிமுகமாகும் என்று குறிப்பிட்டது. இந்த தொலைபேசி நவம்பர் 5 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும். இது Mi CC9 Pro-ன் உலகளாவிய மாறுபாடாகும். 

நவம்பர் 6 புதன்கிழமை ஸ்பெயினின் (Spain) மாட்ரிட்டில் (Madrid) Mi Note 10 வெளியீடு காலை 11:30 மணிக்கு CEST (பிற்பகல் 3 மணி) நடைபெறும் என்று ஜியோமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் அறிவித்தது. கடந்த வாரம், ஜியோமி போலந்து கணக்கில் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட டீஸர் நவம்பர் 14 ஆம் தேதி Mi Note 10-ஐ அறிமுமாக உள்ளது. இது போலந்து பிராந்தியத்தில் உள்ளூர் அறிமுகத்துடன் குறிப்பாக தொடர்புடையதாக இருக்கலாம் - சமீபத்திய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு.

Mi Note 10-ன் கேமரா அம்சங்கள்: 

சமீபத்திய டீஸர்களை நாங்கள் நம்பினால், Mi Note 10-ல் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் காணப்படும். சென்சாரில் 10x hybrid zoom மற்றும் 50x digital zoom ஆகியவை அடங்கும். மேலும், Mi Note 10 கேமரா அமைப்பு புதிய டீஸரில் விரிவாகக் காட்டப்பட்டுள்ளது. இது பென்டா பின்புற கேமராக்கள் (Penta Rear cameras) இருப்பதைக் காட்டுகிறது. இதில் 108-megapixel முதன்மை சென்சார், Portrait shots-க்கு 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 50x zoom செய்யக்ககூடிய 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவை உள்ளன.

Mi Note 10 கேமரா அமைப்பில், ultra-wide-angle lens உடன் 20-megapixel சென்சார் மற்றும் macro shots-களை ஆதரிக்கும் 2-megapixel சென்சார் ஆகியவை அடங்கும் என்பதை டீஸர் எடுத்துக்காட்டுகிறது. இது Mi CC9 Pro கேமரா அமைப்போடு பொருந்துகின்றன. இவை அனைத்தும் நவம்பர் 5 செவ்வாய்க்கிழமை சீனாவில் அறிமுகம் செய்யப்படும். 


Mi Note 10-ன் விவரக்குறிப்புகள்  (எதிர்பார்க்கப்படுபவை)

Mi Note 10-ஆனது Mi CC9 Pro-வின் உலகளாவிய மாறுபாரு என்று நம்பப்படுகிறது. எனவே, இரண்டு போன்களும் ஒரே மாதிரியான விவரக்குறிப்புகலைக் கொண்டிருக்கும் என்று மிகவும் யூகிக்கப்படுகிறது. 

Xiaomi கடந்த வாரம் தனது Weibo பக்கத்தில் மூலம் Mi CC9 Pro, 32-megapixel செல்ஃபி கேமராவுடன் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தியது. இது self-portrait shots-களை மேம்படுத்த 12 special filters-களை ஆதரிக்கும். optical image stabilisation (OIS) ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும். போனில் Snapdragon 730G SoC மற்றும் 5,260mAh பேட்டரி இருப்பதையும் ஜியோமி வெளிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட TENAA பட்டியல், Mi CC9 Pro, 6 ஜிபி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் விருப்பங்கள் மற்றும் 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பு வகைகளுடன் வரும் என்று பரிந்துரைத்தது. TENAA-வில் வெளிவந்த ஸ்மார்ட்போனில் 6.47-inch full-HD+ (1080 x 2340 pixels) OLED டிஸ்பிளே இருக்கும்.

கடந்த மாதம் Mi Note 10 மற்றும் Mi Note 10 Pro-வின்  சான்றிதழ்கள் தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைதொடர்பு ஆணையம் (National Broadcasting and Telecommunications Commission - NBTC) மற்றும் கிழக்கு பொருளாதார தாழ்வாரம் (Eastern Economic Corridor - EEC) வலைத்தளங்களில் வெளிவந்தன. இருப்பினும் ஜியோமி, Mi Note 10 மட்டுமே கிண்டல் செய்து வந்தது. ஆனால், Mi Note 10 Pro-வைப் பற்றி எந்த தகவலும் இல்லை.
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.