அறிமுகமாகிறது 'Mi 9T': சியோமி நிறுவனம் அறிவிப்பு!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
அறிமுகமாகிறது 'Mi 9T': சியோமி நிறுவனம் அறிவிப்பு!

Photo Credit: Twitter/ Xiaomi

சியோமி நிறுவனம் வெளியிட்ட Mi 9T-யின் படம்.

ஹைலைட்ஸ்
 • 'Mi 9T' ஸ்மார்ட்போன் ஜூன் 12-ஆம் தேதியன்று அறிமுகமாகவுள்ளது.
 • இந்த ஸ்மார்ட்போன் பாப்-அப் செல்பி கேமரா கொண்டிருக்கும்
 • ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸருடன் வெளியாகலாம்.

சியோமி நிறுவனம், எம் ஐ நிறுவனத்தின் பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அடுத்த வாரம் அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று, இந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்க்த்தில் அறிவித்திருந்த அறிவிப்பின்படி இந்த 'Mi 9T' ஸ்மார்ட்போன் ஜூன் 12-ஆம் தேதியன்று அறிமுகமாகவுள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் சீனாவில் நடைபெறுகிறதா, இந்தியாவில் நடைபெறுகிறதா, அல்லது வேறு ஏதாவது நாட்டில் நடைபெறுகிறதா, இல்லை இணையதளத்தில் அறிமுகப்படுத்தப் போகிறதா என்பது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. முன்னதாக 'ரெட்மீ K20' தான் உலகின் மற்ற பகுதிகளில் 'Mi 9T'-யாக அறிமுகமாகவுள்ளது என தகவல்கள் வெளியாகின. தற்போதைய இந்த அறிவிப்பின் மூலம், அந்த தகவல் உண்மையில்லை என்பது உறுதியாகியுள்ளது.

"இன்னும் 10 நாட்களே உள்ளது, புதிய #Mi9 உறுப்பினர் ஜூன் 12-ல் அறிமுகமாகவுள்ளது! #Mi9T பற்றிய தகவல்களை மேலும் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளீர்களா?", என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சியோமி நிறுவனம். 

இந்த 'Mi 9T' இன்னும் எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது சியோமி நிறுவனம். அந்த புகைப்பட்த்தின் படி இந்த ஸ்மார்ட்போன் பாப்-அப் செல்பி கேமரா கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் பின்புறத்தில் 3 கேமராக்கள் கொண்டுள்ளது என்பதும் உறுதியாகியுள்ளது. போனின் பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாருக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாததால், இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரிண்டை எதிர்பார்க்கலாம்.

முன்னதாக, இந்த 'Mi 9T' ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்தன. அதை வைத்து பார்க்கும்பொழுது, இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டிருக்கும், இதில் 4000mAh அளவிலான பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும், மேலும் 6.39-இன்ச் FHD+ திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 'Mi 9T' இந்தியாவில் அறிமுகமாகிறதா என்பது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இந்த நிறுவனம் இந்தியாவில் தனது மற்ற இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ரெட்மீ இந்தியாவின் நிர்வாக இயக்குனரான மனு குமார் ஜெய்னின் ட்விட்டர் பதிவின்படி, இந்தியாவில் ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro ஆகிய ஸ்மார்ட்போன்கள் இன்னும் ஆறு வாரங்களில் அறிமுகமாகவுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. Amazon Great Indian Festival Sale: எந்தெந்த போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி.. முழு விவரம்!
 2. Oppo F11, Oppo F11 Pro-வின் விலை தடதட குறைப்பு- முழு விவரம் உள்ளே!
 3. பட்ஜெட் விலையில் விற்பனையைத் தொடங்கிய Oppo A5 2020- ஆஃபர் மற்றும் பிற விவரங்கள்!
 4. Flipkart Big Billion Days Sale: ரியல்மி போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.. முழு விவரம்!
 5. ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சம் மதிப்பிலான லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி! Airtel அதிரடி ஆஃபர்!
 6. டிரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்ட Lenovo K10 Plus இந்தியாவில் ரிலீஸ்!
 7. WhatsApp டூ Facebook… கலக்கல் அப்டேட்… இப்படியொரு விஷயம் இருக்குனு உங்களுக்குத் தெரியுமா..?
 8. செப்டம்பர் 25-ல் ரிலீஸாகும் Redmi 8A-வில் ஸ்பெஷல் என்ன..? - பரபர தகவல்கள்!
 9. Budget Mobile : 48 மெகா பிக்சல் கேமரா மொபைல் ரூ. 8,999 -க்கு விற்பனைக்கு வருகிறது!!
 10. Apparent Suicide: பேஸ்புக் தலைமை அலுவலக கட்டிடத்தில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.