இந்த சிறப்பம்சங்களை கொண்டுதான் வெளியாகவுள்ளதா "Mi 9T Pro"?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
இந்த சிறப்பம்சங்களை கொண்டுதான் வெளியாகவுள்ளதா

ரெட்மீ K20-யின் உலக வெர்ஷனான "Mi 9T Pro"

ஹைலைட்ஸ்
  • 3 பின்புற கேமரா, பாப்-அப் செல்பி கேமரா கொண்ட "Mi 9T Pro" ஸ்மார்ட்போன்
  • ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு இயங்கும்
  • இன்னும் விலை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை

சியோமி நிறுவனம், தனது ஸ்மார்ட்போனான Mi 9T, Mi 9T Pro ஆகிய ஸ்மார்ட்போன்களை உலக அளவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. உலக அளவில் அறிமுகமாகவுள்ள இந்த 9T ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வை மேட்ரிட், மிலான் மற்றும் பாரிஸ் என மூன்று இடங்களில் ஏற்பாடு செய்துள்ளது சியோமி நிறுவனம். இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், இந்த "Mi 9T Pro" ஸ்மார்ட்போனை தனது தளத்தில் விற்பனைக்கு வைத்துள்ளது ஒரு நெதர்லாந்து நிறுவனம். அதில் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்ஸ்னகளையும் வரிசைப்படுத்தியுள்ளது இந்த நிறுவனம். இந்த "Mi 9T Pro" ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமரா, பாப்-அப் செல்பி கேமரா பொன்ற வசதிகளுடன் வெளியாகவுள்ளது.

இந்த தளத்தில், இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், இதன் விலை குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

 "Mi 9T Pro" - சிறப்பம்சங்கள்

ரெட்மீ K20 Pro போன்றே அமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த Mi 9T Pro ஸ்மார்ட்போன், இரண்டு நானோ சிம் வசதி, அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு இயங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் பொன்ற திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பை பெற்றுள்ளது. மேலும்,இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது என அந்த தளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டிருக்கும். மேலும், இதன் முன்புறத்தில் 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமராவை கொண்டிருக்கும் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

64GB சேமிப்பு அளவு கொண்டு வெளியாகவுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 128GB மற்றும் 256GB என மேலும் இரண்டு சேமிப்பு வகைகளில் இந்த ஸ்மார்ட்போன், அந்த தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

முன்பு கூறியது போலவே, இந்த ஸ்மார்ட்போன் ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போனின் மாற்றியமைக்கப்பட்ட வகை போலவே தெரிகிறது தோற்றமளிக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் முதலில் ரசியாவில் வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.