விற்பனையில் எல்.ஜி W10, W30 ஸ்மார்ட்போன்கள், முழு விவரம் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
விற்பனையில் எல்.ஜி W10, W30 ஸ்மார்ட்போன்கள், முழு விவரம் உள்ளே!

இன்று விற்பனையாகவுள்ள எல்.ஜி ஸ்மார்ட்போன்கள்!

ஹைலைட்ஸ்
  • எல்.ஜி W10 ஸ்மார்ட்போனின் விலை 8,999 ரூபாய்
  • எல்.ஜி W30 ஸ்மார்ட்போனின் விலை 9,999 ரூபாய்
  • இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமேசானில் இன்று விற்பனையாகவுள்ளது

முன்னதாக ஜூலை 3 அன்று விற்பனையான நிலையில், எல்.ஜி-யின் புதிய ஸ்மார்ட்போன்களான 'எல்.ஜி W10, W30' இன்று மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. ஜூன் மாத இறுதியில், எல்.ஜி W30 Pro ஸ்மார்ட்போனுடன், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இரண்டாவது முறையாக விற்பனைக்கு வரவுள்ள நிலையில், இன்னும் எல்.ஜி W30 Pro ஸ்மார்ட்போனின் விலை கூட அறிவிக்கப்படவில்லை. 

எல்.ஜி W10, W30 ஸ்மார்ட்போன்களில் விலை!

3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு கொண்டு ஒரே வகையில் வெளியாகவுள்ள இந்த எல்.ஜி W10 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. ஊதா (Tulip Purple) மற்றும் சாம்பல் (Smokey Grey) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

எல்.ஜி W30 ஸ்மார்ட்போனும், 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு என்ற ஒரே வகையில்தான் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. நீலம் (Thunder Blue), சாம்பல் (Platinum Grey), மற்ற்ம் பச்சை (Aurora Green) என மூன்று வண்ணங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமேசான் தளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது.

எல்.ஜி W10 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 18.9:9 என்ற திரை விகித்துடன் 6.19-இன்ச் அளவிலான திரை. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என்ற அளவில் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.

4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v4.2 போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

எல்.ஜி W30 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 19:9 என்ற திரை விகித்துடன் 6.26-இன்ச் அளவிலான HD+ திரை. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவுடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 12 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது மற்ற இரண்டு பின்புற கேமராக்கள். மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.

4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v4.2 போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

எல்.ஜி W30 Pro ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 19:9 என்ற திரை விகித்துடன் 6.21-இன்ச் அளவிலான HD+ திரை. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 632 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவுடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 5 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது மற்ற இரண்டு பின்புற கேமராக்கள். மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.

மற்ற ஸ்மார்ட்போன்களை பொன்றே 4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இன்னும் விலை மற்றும் விற்பனை தேதி அறிவிக்கப்படாத நிலையில் எல்.ஜி W30 Pro பச்சை (Pine Green), நீலம் (Denim Blue), மற்றும் கருப்பு (Black) என மூன்று வண்ணங்களை கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவை கொண்டு வெளியாகவுள்ளது.

  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Premium looks
  • Near-stock Android
  • Bad
  • Underwhelming processor
  • Slow autofocus, weak low-light camera performance
  • Low-resolution display
  • Hybrid dual-SIM slot
Display 6.26-inch
Processor MediaTek Helio P22 (MT6762)
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 12-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.