அமேசானின் விற்பனையில் பச்சை நிற 'எல்.ஜி W30': முழு விவரம் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
அமேசானின் விற்பனையில் பச்சை நிற 'எல்.ஜி W30': முழு விவரம் உள்ளே!

பச்சை வண்ணம் தவிர்த்து நீலம், சாம்பல் என மேலும் இரு வண்ணங்களை இந்த 'எல்.ஜி W30' ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
 • எல்.ஜி W30 முன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது.
 • அமேசான் ப்ரைம் டே விற்பனையில் 10 சதவிகிதம் தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்
 • இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது

நீலம் (Thunder Blue), சாம்பல் (Platinum Grey), மற்ற்ம் பச்சை (Aurora Green) என மூன்று வண்ணங்களில் அறிமுகமான எல்.ஜி W30 ஸ்மார்ட்போனில் பச்சை (Aurora Green) நிறம் கொண்ட ஸ்மார்ட்போன் மட்டும் அமேசான் ப்ரைம் டே சேலில் விற்பனையாகிறது. இந்த ஸ்மார்ட்போன்  3GB RAM, 32GB சேமிப்பு, 6.26-இன்ச் திரை, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா, 4000mAh பேட்டரி என்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

எல்.ஜி W30 ஸ்மார்ட்போன்களில் விலை!

எல்.ஜி W30 ஸ்மார்ட்போன், 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு என்ற ஒரே வகையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. நீலம் (Thunder Blue), சாம்பல் (Platinum Grey), மற்ற்ம் பச்சை (Aurora Green) என மூன்று வண்ணங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

எல்.ஜி W30 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W30 ஸ்மார்ட்போன். 19:9 என்ற திரை விகித்துடன் 6.19-இன்ச் அளவிலான HD+ திரை. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவுடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 12 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது மற்ற இரண்டு பின்புற கேமராக்கள். மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.

4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v4.2 போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. Redmi Note 8 ஸ்மார்ட்போன்கள், ஒரு நாளில் 1 மில்லியன் முன்பதிவு!
 2. Nokia 7.2 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியானது!
 3. 55-இன்ச் QLED திரை கொண்ட OnePlus TV!
 4. Android Q இப்போது Android 10 மட்டுமே, இனிப்பு பெயர்கள் எதுவும் இல்லை!
 5. 3 பின்புற கேமராக்களுடன் அறிமுகமானது சாம்சங் Galaxy A50s, Galaxy A30s!
 6. இன்று விற்பனையில் Mi A3, விலை, சிறப்பம்சங்கள், சலுகைகளை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்!
 7. 3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட், அறிமுகமானது "Mi A3"!
 8. ஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது 'Redmi Note 8, Note 8 Pro' ஸ்மார்ட்போன்கள்!
 9. ஒரு விண்கல் பூமியைத் தாக்கும், தப்பிக்க வழிகள் இல்லை - எச்சரிக்கும் Elon Musk!
 10. 'Mi A3' ஸ்மார்ட்போனின் விலை என்ன, அறிமுகத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.