இன்று விற்பனைக்கு வருகிறது 'எல்.ஜி W10, W30' ஸ்மார்ட்போன்கள்: எங்கு, எப்போது?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இன்று விற்பனைக்கு வருகிறது 'எல்.ஜி W10, W30' ஸ்மார்ட்போன்கள்: எங்கு, எப்போது?

4000mAh பேட்டரி, ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ளது எல்.ஜி W30

ஹைலைட்ஸ்
  • ஊதா மற்றும் சாம்பல் என இரு வண்ணங்களில் எல்.ஜி W10 ஸ்மார்ட்போன்
  • நீலம், சாம்பல் மற்றும் பச்சை ன மூன்று வண்ணங்களில் எல்.ஜி W30
  • இன்னும் எல்.ஜி W30 Pro-வின் விலை மற்றும் விற்பனை தேதி அறிவிக்கப்படவில்லை

எல்.ஜி நிறுவனம்  W-தொடரில் அறிமுகப்படுத்திய மூன்று ஸ்மார்ட்போன்களில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இன்று விற்பனைக்கு வரவுள்ளது. இன்று விற்பனையாகவுள்ள இந்த எல்.ஜி-யின் W10, W30 ஸ்மார்ட்போன்கள் அமேசான் இணைய தளத்தில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனையாகவுள்ளது. முன்னதாக, எல்.ஜி நிறுவனம் இந்தியாவில் W-தொடரில் W10, W30, W30 Pro ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. 

இந்த ஸ்மார்ட்போன்கள் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. போர்ட்ரைட், போக்கே, நைட் மோட் மற்றும் வைட்-ஆங்கிள் என பல வசதிகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள். இதில் W30, W30 Pro ஸ்மார்ட்போன்கள், வாட்டர்-ட்ராப் நாட்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது மற்றும் W10 ஸ்மார்ட்போன் சாதரான நாட்ச் திரை கொண்டு வெளியானது. மேலும், இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் 4000mAh பேட்டரியுடன் வெளியானது.

இவற்றில் W10, W30 ஸ்மார்ட்போன்கள் இன்று விற்பனையாகவுள்ளது. இதனுடன் அறிமுகமான W30 Pro ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எல்.ஜி W10, W30 ஸ்மார்ட்போன்களில் விலை!

3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு கொண்டு ஒரே வகையில் வெளியாகவுள்ள இந்த எல்.ஜி W10 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. ஊதா (Tulip Purple) மற்றும் சாம்பல் (Smokey Grey) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

எல்.ஜி W30 ஸ்மார்ட்போனும், 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு என்ற ஒரே வகையில்தான் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. நீலம் (Thunder Blue), சாம்பல் (Platinum Grey), மற்ற்ம் பச்சை (Aurora Green) என மூன்று வண்ணங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமேசான் தளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது.

எல்.ஜி W10 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 18.9:9 என்ற திரை விகித்துடன் 6.19-இன்ச் அளவிலான திரை. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என்ற அளவில் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.

4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v4.2 போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

எல்.ஜி W30 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 19:9 என்ற திரை விகித்துடன் 6.26-இன்ச் அளவிலான HD+ திரை. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவுடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 12 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது மற்ற இரண்டு பின்புற கேமராக்கள். மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.

4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v4.2 போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

எல்.ஜி W30 Pro ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 19:9 என்ற திரை விகித்துடன் 6.21-இன்ச் அளவிலான HD+ திரை. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 632 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவுடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 5 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது மற்ற இரண்டு பின்புற கேமராக்கள். மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.

மற்ற ஸ்மார்ட்போன்களை பொன்றே 4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இன்னும் விலை மற்றும் விற்பனை தேதி அறிவிக்கப்படாத நிலையில் எல்.ஜி W30 Pro பச்சை (Pine Green), நீலம் (Denim Blue), மற்றும் கருப்பு (Black) என மூன்று வண்ணங்களை கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவை கொண்டு வெளியாகவுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது!
  2. Smart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்!
  3. இந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்!
  4. Realme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்!
  5. இன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது?
  6. Vivo Z1x: பிளிப்கார்ட், விவோ தளங்களில் முதல் விற்பனை, முழு விவரங்கள் உள்ளே!
  7. ரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை?
  8. விலைக் குறைப்பை அடுத்து இந்தியாவில் எந்த iPhone எவ்வளவு விலை, முழு பட்டியல் இங்கே!
  9. இந்தியாவில் Samsung Galaxy A50s, Galaxy A30s ஸ்மார்ட்போன்கள், விலை, விற்பனை?
  10. Flipkart Big Billion Days 2019: அறிவிக்கப்பட்ட தேதிகள், எப்போது விற்பனை?
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.