இளைஞர்களை குறிவைத்து விற்பனைக்கு வரும் எல்.ஜி-யின் புதிய ஸ்மார்ட் போன்...!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இளைஞர்களை குறிவைத்து விற்பனைக்கு வரும் எல்.ஜி-யின் புதிய ஸ்மார்ட் போன்...!

இந்தியாவில் எல்.ஜி க்யூ9 (LG Q9) சுமார் ரூ.31,000-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆன எல்.ஜி க்யூ9, இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

19:5:9 டிஸ்பிளே பேனலும், குயால்கோம் ஸ்னாப்டிராகன் 821 எஸ்.ஓ.சி மற்றும் 16 மெகா பிக்சல் கேமராவுடன் அறிமுகமாகிய இந்த ஸ்மார்ட்போன் பூம்பாக்ஸ் ஸ்பீக்கரூடன் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 3,000mAh பேட்டரி பவருடன் களமிரங்கும் இந்த ஸ்மார்ட்போன் (எல்.ஜி க்யூ9) இந்தியாவில் ரூ.31,000-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வரும் ஜூலை 11ஆம் தேதி முதல் விற்பனைக்கு வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் (கார்மையின் ரெட், அரோரா பிளாக் மற்றும் மொராக்கன் புளு) போன்ற நிறங்களில் வெளியாகவுள்ளது. அண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி நினைவகத்தையும் கொண்டது.

பின்புறத்தில் இரண்டு கேமரா வசதி இல்லாத நிலையிலும் 16 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இளைஞர்கள் மத்தியில் இந்த ஸ்மார்ட்போனுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.