சீனாவில் அறிமுகமான லெனோவோ கே6 எஞ்ஜாய்! தெரிந்துகொள்ள வேண்டியவை!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
சீனாவில் அறிமுகமான லெனோவோ கே6 எஞ்ஜாய்! தெரிந்துகொள்ள வேண்டியவை!

மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் 3டி கிரேடியன்ட் டிசையின் போன்ற பல முக்கிய அம்சங்களுடன் சீனாவில் வெளியாகியுள்ள லெனோவோ கே6 எஞ்சாய்!

ஹைலைட்ஸ்
 • இந்த தயாரிப்பில் மூன்று பின்புற கேமராக்கள் அமைந்துள்ளது.
 • மேலும் மீடியாடெக் ஹீலோயோ ஏ22 எஸ்ஓசி-யால் பவரூட்டப்பட்டுள்ளது.
 • இரண்டு சேமிப்பு வசதி வகைகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகுகிறது.

லெனோவோ நிறுவனம் சார்பில் லெனோவோ கே6 எஞ்ஜாய் (Lenovo K6 Enjoy) ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. கிரோடியன்ட் டிசைன் மற்றும் வாட்ர்-டிராப் நாட்ச் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6.22 இஞ்ச் திரையை பெற்றுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஏ22 எஸ்ஓசி, மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் இரண்டு சேமிப்பு வசதி வகைகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் வெளியான செய்தி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

லெனோவோ கே6 எஞ்ஜாய் (Lenovo K6 Enjoy) விலை:

இரண்டு சேமிப்பு வசதி அமைப்புகளுடன் களமிறங்கியுள்ள இந்த லெனோவோ கே6 எஞ்ஜாய் ஸ்மார்ட்போன் ரூ.14,000 முதல் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது. சீனாவின் லெனோவோ ஸ்டோரில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகியுள்ள நிலையில் இந்தியாவில் வெளியாகும் தேதி பற்றிய தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

லெனோவோ கே6 எஞ்ஜாய் (Lenovo K6 Enjoy) அமைப்புகள்:

இரண்டு சிம்-கார்டு வசதிகள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருள் கொண்டு இயங்குகிறது. மேலும் இந்த தயாரிப்பு கருப்பு மற்றும் மிராஜ் புளூ ஆகிய நிறங்களில் வெளியாகிறது. 6.22 இஞ்ச் ஹெச்டி திரை, ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 4ஜிபி ரேம் வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

மேலும் லெனோவோ நிறுவனம் சார்பில் இந்த போனில் ஆக்டா-கோர் மீடியா டெக் ஹீலியோ ஏ22 எஸ்ஓசி பொருத்தப்பட்டுள்ளது. கேமரா வசிதிகளை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் அமைந்துள்ளது. 12 மெகா பிக்சல் முதற்கட்ட சென்சார், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 8 மெகா பிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் இந்த போனில் இடம்பெற்றுள்ளது.  

போனின் முன்புறத்தில் 8 மெகா பிக்சல் கேமராவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் செயர்கை நுண்ணறிவியல் தொழிநுட்பம் கொண்டுள்ளதால் சிறந்த செஃல்பிகளை எடுக்க உதவுகிறது.

மேலும் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இந்த லெனோவோ கே6 தயாரிப்பு 64ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. இத்துடன் கூடுதலாக 256ஜிபி நினைவகத்தை நம்மால் இணைக்க முடிகிறது. 3,300mAh பேட்டரி வசதி மற்றும் 10W சார்ஜிங் வசதியை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. அதுபோல் 3.5mm ஹெட்போன் ஜாக், 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் டைப்சி சார்ஜிங் வசதி போன்ற பல முன்னனி அமைப்புகள் இந்த போனில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. 25x ஜூம் திறனுடன் Redmi Note 8 Pro!
 2. அடுத்த வாரம் அறிமுகமாகவுள்ள புதிய ரியல்மீ ஸ்மார்ட்போன்!
 3. சூரிய குடும்பத்தில் வேறு உயிர்கள் உள்ளதா? - ஆராயத் தயாராகிறது நாசா!
 4. 9,999 ரூபாயில் விற்பனைக்கு வந்த HTC Wildfire X ஸ்மார்ட்போன், விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!
 5. 3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட், அறிமுகமானது "Mi A3"!
 6. ஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது 'Redmi Note 8, Note 8 Pro' ஸ்மார்ட்போன்கள்!
 7. ஒரு விண்கல் பூமியைத் தாக்கும், தப்பிக்க வழிகள் இல்லை - எச்சரிக்கும் Elon Musk!
 8. 'Mi A3' ஸ்மார்ட்போனின் விலை என்ன, அறிமுகத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
 9. இந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்!
 10. 10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.