ரயில் பயணங்களை எளிமையாக்கும் ஜியோ ரயில் ஆப்! மேலும் தகவல்கள் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ரயில் பயணங்களை எளிமையாக்கும் ஜியோ ரயில் ஆப்! மேலும் தகவல்கள் உள்ளே!

இந்த புதிய ஆப்பில் ரயிலின் பிஎன்ஆர் நிலை, இருக்கைகளின் எண்ணிக்கை, நேரகால அட்டவணை மற்றும் இதர தகவல்கள் போன்ற அனைத்தையும் நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஹைலைட்ஸ்
  • ஜியோ ஆப்பை ஜியோ ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடியும்!
  • ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 ஆகிய இரண்டிலும் இது பொருந்தும்
  • பிஎன்ஆர் நிலை,நேரகால அட்டவணை மற்றும் இதர தகவல்கள் பெற முடிகிறது.

ரயில் பயணங்களை எளிமையாக்க ஜியோ நிறுவனம் ஒரு புதிய ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஜியோ போன் வாடிக்கையாளர்கள் இனி ரயில் டிக்கெட் வாங்க ஐஆர்சிடிசி வலைதளத்திற்கு செல்லாமல் ஜியோ ரயில் ஆப் மூலம் ரயில் பயணசீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும். 

கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மற்றும் இதர ஆன்லைன் வாலட்டுகள் போன்ற அனைத்தையும் பயன்படுத்தி பயண சீட்டுகளை முன்பதிவு மற்றும் ரத்தும் செய்ய முடிகிறது. மேலும் இந்த புதிய ஆப்பில் ரயிலின் பிஎன்ஆர் நிலை, இருக்கைகளின் எண்ணிக்கை, நேரகால அட்டவணை மற்றும் இதர தகவல்கள் போன்ற அனைத்தையும் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஆப்பை ஜியோ போன் அல்லது ஜியோ போன் 2-வில் பதிவிறக்கம் செய்யலாம்.  மேலும் ஜியோ ஸ்டோரில் இருந்து இந்த ஆப்பை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே ஐஆர்சிடிசி அக்கவுண்ட் இல்லாதவர்கள் புதிதாக ஓன்றை இதில் உருவாக்கி பயன்படுத்தி கொள்ள முடியும்.

கடந்த ஆண்டு ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமான வாட்ஸ் ஆப்பை உருவாக்கியது.  அதைதொடர்ந்து யூ டியுப் தற்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டின் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் அதிகபடியான போன்களை விற்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.