ஜியோ போனில் வரும் கும்பமேளா பற்றிய புதிய அப்டேட்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஜியோ போனில் வரும் கும்பமேளா பற்றிய புதிய அப்டேட்!

கடந்த திங்கட்கிழமையன்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பாக வெளியான தகவல் படி இனி ஜியோ போன்களுக்கு முக்கிய பண்டிகைகள் கும்ப மேளா போன்ற மதம் சார்ந்த விழாக்களைப் பற்றிய தகவல்களின் அறிவிப்பு போன்களுக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜியோ சார்பாக வெளியான தகவல் படி விழாக்களைப் பற்றிய முழு தகவல்கள், சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள், வழித்தடங்கள் மற்றும் பல வசதிகள் இனி ஜியோ போன்களில் இடம்பெறும் எனக் கூறினர். கும்ப மேளா பற்றிய செய்திக் குறிப்புகள் 4ஜி டேட்டா வை பயன்படுத்தி செயல்படும் என்றும் அதன் மூலம் தரிசனம் செய்யப்போகும் மக்களுக்கு எவ்வித தடங்கலும் இருக்காது என தெரிவித்தனர்.

அதுபோன்று தரிசனம் செய்யும்போது குடும்பத்தாரை சந்திப்பது மற்றும் தொலைந்தவர்களை கண்டுபிடிப்பதற்கு மற்றும் கும்ப மேளாவைப் பற்றிய பக்தி பாடல்களை கேட்கவும் என எல்லா வசதியும் ஜியோ போன்களில் இணையவுள்ளது. இந்த சேவை ஏற்கனவே ஜியோவை பயன்படுத்துபவர்களுக்கும் பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு உதவிகள் மற்றும் கோரிக்கைகளுக்கு எண் '1991' அழைக்கவும் வசதி உள்ளதென தகவல் அளித்துள்ளனர்.

மேலும் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஜியோ நிறுவனம் சார்பாக பேசிய அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘ மக்கள் மத்தியில் பிரபலமாக மட்டும்மில்லாமல் புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துவதையும் ஜியோ நிறுவனம் தொடர்ந்து சாதனை செய்து வருவதாக கூறினர். ஜியோவின் கும்பமேளா மூலம் இதை நிரூபிக்க முடிகிறது எனவும். இந்தியாவை பொறுத்தவரை ஜியோவே மிகவும் அதிகம் விற்பனையாகும் போன் என்றும் அதற்கு தங்களமது ஆஃபர்களே காரணம் எனக் கூறினார். மேலும் இதன் மூலம் ரூ.501க்கு நம்மால் ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்பதையும் இது இந்தியாவுக்காக, இந்தியாவில் செய்யப்பட்டது' என அவர் கூறினார்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.