ஆஃப்லைன் விற்பனை மையங்களுக்கு வந்தது ஜியோ எக்ஸ்சேஞ் ஆஃபர்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஆஃப்லைன்  விற்பனை மையங்களுக்கு வந்தது ஜியோ எக்ஸ்சேஞ் ஆஃபர்
ஹைலைட்ஸ்
  • மான்சூன் ஹங்காமா ஆஃபர் அறிமுகமானது
  • ஆஃபரில் 501 ரூபாய்க்கு ஜியோ ஃபோன் கிடைக்கிறது
  • 501 ரூபாய் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி கொடுக்கப்படும்

ஜியோ ஃபோன் எக்ஸ்சேஞ் சலுகை இப்போது ஜியோவின் ஷோ ரூம் மற்றும் அதன் மற்ற விற்பனை மையங்களில் கிடைக்கத் தொடங்கியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில், புதிய ஜியோ ஃபோன்களை 501 ரூபாய்க்கு எக்ஸ்சேஞ் செய்து கொள்ளும் திட்டத்தை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.

இந்த 501 ரூபாய் பணத்தை மூன்று ஆண்டுகள் முடிந்துவுடன் உங்களுக்கு திரும்ப வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் ஜியோ விற்பனை மையங்களுக்கு சென்று பழைய ஃபோன்களை கொடுத்து புதிய ஜியோ ஃபோனை பெற்றுக் கொள்ளலாம். மேலும் 99 ரூபாய் ரீச்சார்ஜ் ஆஃபரும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு படி, 2ஜி/3ஜி/4ஜி வோல்ட் மொபைல்களைக் கொடுத்து, 501 ரூபாய் புதிய ஃபோனை பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் பழைய மொபைல்கள் நல்ல இயங்கும் நிலையில் இருக்க வேண்டும் என்கிறது ஜியோ. எந்த டேமேஜும் இல்லாமல், சார்ஜர் மற்றும் பேட்டரியோடு இருக்க வேண்டும் என்றும் நிர்பந்திக்கிறது. புதிய ஜியோ ஃபோனோடு ஜியோ சிம்மும் கொடுக்கப்படும். அதை வேண்டுமென்றால், பழைய சிம் நம்பருக்கு பேர்ட் செய்து கொள்ளலாம். ஜனவரி 1, 2015-ம் ஆண்டுக்கு பிறகு விற்கப்பட்ட ஃபோன்கள் மட்டுமே எக்சேஞ்சுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

புதிய ஜியோ ரீச்சார்ஜ் ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜியோ ஃபோனோடு 594 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால், 500 எம்.பி, 4ஜி டேட்டா மற்றும் அல்ன்லிமிடெட் காலும் 6 மாதத்துக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் இதில் 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. மேலும், எக்ஸ்சேஞ்சில் புதிய ஃபோன் வாங்குபவர்களுக்கு கூடுதலாக 6ஜி.பி டேட்டாவுக்கான 101 ரூபாய் மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் 6 மாதத்துக்கு 90 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய ஃபோன் வாங்க நினைப்பவர்கள் 594 ரூபாய்க்கு கட்டாயம் ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் என்கிறது அந்நிறுவனம்.

ஜியோ ஃபோன் அம்சங்கள்:

ஜியோ ஃபோன் 4ஜி வோல்ட் நெட்வொர்க் உடன் வருகிறது. 1.2 ஜிகா ஹெர்ட்ஸ்  டூயல் கோர் பிராசஸர்,512 எம்.பி ரேமும் இருக்கிறது. 2.4 இன்ச் டிஸ்பிளேவும், 4ஜி.பி ஸ்டோரேஜும் கொண்டிருக்கிறது. 128 ஜி.பி வரையிலான மைக்ரோ எஸ்.டி கார்டும் போட்டுக் கொள்ளலாம்.  வைஃபை மற்றும் 2000mAh பேட்டரியும் இருக்கிறது.

 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்