நீங்க ஐபோன் வாங்க இதுதான் சரியான டைம்... தவறவிட்டுடாதீங்க!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
நீங்க ஐபோன் வாங்க இதுதான் சரியான டைம்... தவறவிட்டுடாதீங்க!

ஐபோன் XR தயாரிப்பு தள்ளுபடிக்குப் பிறகு ரூ. 53,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஹைலைட்ஸ்
 • ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு ரூ.53,900க்கு ஐபோன் XR விற்பனை!
 • மற்றவர்களுக்கு ரூ.59,900க்கு இந்த ஐபோன் மாடல் விற்பனை!
 • 128ஜிபி மற்றும் 256ஜிபி மாடல்களும் தள்ளுபடி பெருகின்றனர்.

நீங்கள் ஐபோனை வாங்க நெடு நாட்களாக காத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் இதுதான் உங்களுக்கான சரியான சமயம். ஆப்பிள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஐபோன் கடைகளில் ஐபோன்XR, ரூ.76,900 இருந்து குறைந்து ரூ.59,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த குறுங்கால தள்ளுபடியுடன் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் ஐபோன் விலை குறைந்து (64ஜிபி) மாடல் ரூ.53,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தயாரிப்பின் 128ஜிபி மாடல் (ரூ.58,400)க்கும், 256ஜிபி மாடல் (ரூ.67,400)க்கும் தள்ளுபடியின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களாக இல்லாதவர்களுக்கு 128ஜிபி மாடல் (ரூ.64,900)க்கும், 256ஜிபி மாடல் (ரூ.74,900)க்கும் தள்ளுபடியின் அடிப்படையில் எம்.ஆர்.பி-இல் இருந்து குறைந்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த தயாரிப்புகளை 12/24 மாதங்கள் தவணைத் திட்டதிலும் பெற முடிகிறது.

ஐபோன் இந்தியா விலை விபரம்:

ஐபோன் XR                தயாரிப்பு                          விலை                  

ஹெச்டிஎஃப்சி வங்கியின் வாடிக்கையாளராக இல்லாதவர்களுக்கான விலை

ஹெச்டிஎஃப்சி வங்கியின் வாடிக்கையாளர்களுக்கான விலை
ஐபோன் XR 64GB ரூ.76,900 Rs. 59,900 Rs. 53,900
ஐபோன்XR 128GB ரூ.81,900 Rs. 64,900 Rs. 58,400
ஐபோன் XR 256GB ரூ.91,900 Rs. 74,900 Rs. 67,400

இதன் மூலம் பழைய ஐபோன் வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன்களுக்கு மாறும் வாய்பை ஆப்பிள் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் இந்த விலை குறைப்பு மூலம் ஐபோன் XR நேரடியாக சாம்சங் கேலக்ஸி எஸ்10e ( ₹ 55,900), சாம்சங் கேலக்ஸி எஸ்10+ மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 (₹ 62,000) போன்களுடன் மோதுகிறது.

சாம்சங் தயாரிப்பு மட்டுமின்றி (₹ 37,999) விற்பனை செய்யப்பட்ட ஓன்பிளஸ் 6T போனுடன் கொஞ்சம் கூடுதலாக செலவழித்து மக்கள் ஐபோன்XR போனை தேர்ந்தெடுப்பார்கள் என ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது. 6.1 இஞ்ச் திரை கொண்ட இந்த ஐபோன் தயாரிப்பு சிறந்த பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் இருக்கட்டும்… ‘ஸ்மார்ட் டயப்பர்’ கேள்விப்பட்டிருக்கீங்களா..?
 2. பாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்!
 3. நோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..!?- பரபர தகவல்கள்
 4. இன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்!
 5. சுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்!
 6. தொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்!
 7. இந்தியாவில் நெட்பிளிக்ஸின் குறைந்த விலை 'மொபைல் ஒன்லி' திட்டம்!
 8. வைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா?
 9. இன்று துவங்குகிறது 'ரியல்மீ X'-ன் 'ஹேட்-டூ-வெய்ட்' சேல்!
 10. 8 மணி நேர பேட்டரியுடன் Mi ப்ளூடூத் நெக்பேண்ட், இந்தியாவில் அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.