பெஸ்ட் செல்லிங் போனாக உள்ளது ஐபோன் எக்ஸ்.ஆர் – கிரேக் ஜோஸ்வியாக்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
பெஸ்ட் செல்லிங் போனாக உள்ளது ஐபோன் எக்ஸ்.ஆர் – கிரேக் ஜோஸ்வியாக்
ஹைலைட்ஸ்
  • ஐபோன் எக்ஸ்ஆர் ($749) ஆனது மற்ற இரு மாடல்களுடன் அறிவித்தது.
  • எக்ஸ்.ஆர் பல முக்கியம்சங்களை குறைவான விலை போனில் கொண்டு வருகிறது.
  • ஐபோன் எக்ஸ்.ஆர் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாகும்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ்.ஆர் அக்டோபர் மாதத்தில் வெளியானதிலிருந்து தற்போது நல்ல முறையில் விற்பனையாகி வருவதாக அந்நிறுவனத்தின் நிர்வாகி ராய்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

ஐபோன் எக்ஸ்.எஸ் (ரூ.88,339) மற்றும் எக்ஸ்.எஸ் மேக்ஸ் (ரூ.98,000) ஆகிய இரு போன்களுடன் ஐபோன் எக்ஸ்.ஆர் $749(ரூ.52,400) அறிமுகப்படுத்தப்பட்டது.

எக்ஸ்.ஆர் பல முக்கியம்சங்களை குறைவான விலை போனில் கொண்டு வருகிறது.

சமீப காலமாக ஸ்மார்ட்போன் விற்பனையாளர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துக்கள் வருவதாக கூறப்பட்டுள்ளது. நவம். 1 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் முடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், மூதலிட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ்.ஆரின் ஒரு பகுதியாக ரெட் வெர்ஷன் போன்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஹெச்ஐவி-யினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் துணை தலைவர் கிரேக் ஜோஸ்வியாக் கூறுகையில், இதுவரை ரெட்வெர்ஷன் மூலம் $200 மில்லியன் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்