11 வயது சிறுமியின் கைகளில் வெடித்த 'ஐபோன்'!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
11 வயது சிறுமியின் கைகளில் வெடித்த 'ஐபோன்'!

Photo Credit: YouTube/ KTNV Channel 13 Las Vegas

ஹைலைட்ஸ்
  • திடிரென தீப்பொறி வெளியானது : சிறுமி
  • இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமியின் தாய் ஆப்பிள் நிறுவனத்திடம் புகார்
  • ஆப்பிள் எரிந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை அனுப்ப அறிவுறித்தியது

அமெரிக்காவின் கலிபோர்னியாவில்தான் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. ஒரு 11 வயது சிறுமி தன் கைகளில் ஆப்பிள் ஐபோன் 6 ஸ்மார்ட்போனை வைத்திருந்திருக்கிறார். திடீரென, அந்த ஸ்மார்ட்போன் தீ பற்ற துவங்கிவிட்டது. பின் தீ பிடித்த ஸ்மார்ட்போனை அந்த சிறுமி ஒரு போர்வைக்குள் தூக்கி எறிய சிறிய சேதத்துடன் அந்த தீ அனைந்ததாக ஒரு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

'எனது ஸ்மார்ட்போனை கைகளில் வைத்துக்கொண்டு நான் அமர்ந்துகொண்டிருந்தேன். திடீரென அந்த ஸ்மார்ட்போனிலிருந்து தீப்பொறிகள் வெளிப்பட்டன. நான் உடனே ஒரு போர்வைக்குள் அந்த ஸ்மார்ட்போனை தூக்கி எறிந்துவிட்டேன். நான் அங்குதான் அமர்ந்திருந்தேன். அந்த ஸ்மார்ட்போனின் தீ சிறிய சேதத்துடன் அனைந்துவிட்டது' என இந்த சம்பவம் குறித்து அந்த 11 வயது சிறுமி விவரித்திருந்தார். 

அந்த சிறுமியின் தாய், மரியா அடாடா, உடனே அப்பிள் உதவியை நாடியுள்ளார். எரிந்துபோன அந்த ஸ்மார்ட்போனை புகைப்படம் எடுத்து அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார். 

'இந்த விபத்தில் நல்ல வேளை என் மகளிற்கு எந்த காயமும் நேரவில்லை' என ஒரு செய்தி நிறுவனத்திற்கு இவர் கூறியுள்ளார்.

இது குறித்து ஐபோன் நிறுவனம் கூறியுள்ளது என்னவென்றால், 'பல காரணங்களால் ஐபோன் தீப்பிடிக்கலாம், அங்கீகரிக்கப்படாத சார்ஜர்களை பயன்படுத்து ஒரு முக்கியமான காரணம்தான்.'

ஐபோன்கள் தீ பிடிப்பது இது முதன்முறையல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஐபோன் 7 ப்ளஸ் தீ பிடிப்பது போன்ற காட்சி டிவிட்டரில் வைரலானது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கூட அமெரிக்காவின் ஓஹியோ பகுதியில் ஒருவரின் ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன் தீ பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.