அமேசானில் ஸ்பெஷலாக வெளியாகும் ஹூவாயின் Y9 (2019)

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
அமேசானில் ஸ்பெஷலாக வெளியாகும் ஹூவாயின் Y9 (2019)

புது டெல்லியில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த புதிய ஃபோன் அறிமுகம் செய்யப்பட்டது.

மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட ஹூவாய் Y9 (2019) இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. புது டெல்லியில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த புதிய ஃபோன் அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு முன்னதாக வெளியான ஹூவாயின் Y9 (2018) விற்பனையில் உள்ள நிலையில் கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ஹூவாயின் Y9(2019) ஸ்மார்ட் ஃபோன் தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 

ஹூவாய் Y9 (2019) யின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படாத நிலையில், அமேசான் இணையதளத்தில் இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது.  இந்த ஃபோனுடன் சுமார் ரூ.2,990 மதிப்புள்ள போட் ராக்கர்ஸ் நிறுவனத்தின் ஸ்போர்ட் புளூடூத் ஹெட்போன்ஸ்  இலவசமாக வழங்கப்படவுள்ளது.

சுமார் 6.5 இஞ்ச் டிஸ்பிளே கொண்ட இந்த ஹூவாய் Y9 (2019) பின்புறம் இரண்டு கேமராக்களும் முன்புறம் செல்ஃபி கேமராவும் உள்ளது. மேலும் ஹாய் சிலிக்கான் க்ரீன் 710 எஸ்.ஓ.சி மற்றும் 4,000mAh பவருள்ள பேட்டரியை கொண்ட மேலும் ஹூவாய் Y9 (2019) ஃபோன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்கவுள்ளது. 3 மற்றும் 4 ஜிபி ரேம் கொண்ட இந்த போன் 64 ஜிபி நினைவகத்தைக் கொண்டது.

இத்துடன் கைவிரல் ரேகை பதிவு போன்ற மற்ற பல அம்சங்களை கொண்ட இந்த ஃபோனை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.