இந்த ஹூவேய் போனுக்கு இந்தியாவில் ரூ.3000 விலை குறைக்கப்பட்டுள்ளது!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இந்த ஹூவேய் போனுக்கு இந்தியாவில் ரூ.3000 விலை குறைக்கப்பட்டுள்ளது!

ஹூவேய் Y9 (2019) ஸ்மார்ட்போன் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதே மாதத்திலேயே இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. 

ஹைலைட்ஸ்
  • ஆக்டா-கோர் கிரின் 710 எஸ்.ஓ.சி ப்ராசஸரால் இந்த போன் பவரூட்டப்பட்டுள்ளது
  • இந்த போனில் 4,000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளது
  • டூயல் செல்ஃபி கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஹூவேய் நிறுவனத்தின் ஹூவேய் Y9 (2019) போனின் விலை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அமேசான் ஆன்லைன் தளம் மூலம் அந்த போனை, 12,990 ரூபாய்க்குப் பெற முடியும். ஹூவேய் Y9 (2019), அறிமுகப்படுத்தியபோது 15,990 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த போன் தற்போதைக்கு அமேசானில் மட்டும்தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் ஹூவேய் போனான இதில், டூயல் செல்ஃபி மற்றும் பின்புற கேமரா, 6.5 இன்ச் முழு எச்டி+ திரை, ஆக்டா-கோர் கிரின் 710 எஸ்.ஓ.சி ப்ராசஸர், 4000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். மிட்நைட் ப்ளாக் மற்றும் சஃபையர் ப்ளூ நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். 

ஹூவேய் Y9 (2019) போனுக்கு விலை குறைக்கப்பட்டது குறித்து அமேசான் தளத்தில் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 15,000 ரூபாய்க்குள் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 3,000 ரூபாய் விலை குறைப்புப் பயனுள்ளதாக இருக்கும். 

இந்த விலை குறைப்பானது, இனி அப்படியே இருக்குமா அல்லது சிறிது காலத்துக்கு மட்டும் நீடிக்குமா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. இது குறித்து ஹூவேய் நிறுவனத்தை நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். விரைவில் அது குறித்தான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம். 

ஹூவேய் Y9 (2019) ஸ்மார்ட்போன் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதே மாதத்திலேயே இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. 

ஹூவேய் Y9 (2019) சிறப்பம்சங்கள்:

சுமார் 6.5 இஞ்ச் டிஸ்பிளே கொண்ட இந்த ஹூவாய் Y9 (2019), பின்புறம் இரண்டு கேமராக்களும் முன்புறம் செல்ஃபி கேமராவும் கொண்டுள்ளது. மேலும் ஹாய் சிலிக்கான் க்ரீன் 710 எஸ்.ஓ.சி மற்றும் 4,000mAh பவருள்ள பேட்டரியை கொண்ட ஹூவாய் Y9 (2019) ஃபோன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும். 3 மற்றும் 4 ஜிபி ரேம் கொண்ட இந்த போன் 64 ஜிபி நினைவகத்தைக் கொண்டது.

இத்துடன் கைவிரல் ரேகை பதிவு போன்ற மற்ற பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.