ஹூவாய் நிறுவனத்திற்கு தடையா! விளக்கும் மத்திய அரசு!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஹூவாய் நிறுவனத்திற்கு தடையா! விளக்கும் மத்திய அரசு!

ஹூவாய் நிறுவனத்தின் போன்களை பாதுகாப்பு காரணங்களுக்காக பல நாடுகளில் தடை செய்யப்படப்போகிறது என்ற வதந்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. பல நாடுகளில் இதற்கு தடை விதிக்கப்பட்டது என்று வந்த அறிவிப்பால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

மேலும் இந்த வதந்திகளை குறித்து டெலிக்ராம் செக்கரட்டரி அருணா சுந்தர ராஜனிடம் கேட்டபோது இந்தியாவை பொறுத்தவரை ஹூவாய் நிறுவனத்திற்கு தற்போது 5ஜி டேட்டா சோதிப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கி இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் அரசு 5ஜி டேட்டாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் ‘இந்த தொழில்நுட்பத்தை முழுவதுமாக அமல் படுத்துவதற்கு முன்னர் அரசு சோதனை நடத்த மட்டுமே அனுமதிக்கும்' எனக் கூறினார்.

அமெரிக்கா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சீன தயாரிப்பான ஹூவாய் நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் கடந்த வாரம் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் இந்த பிராண்டை இந்தியாவில் தடை செய்ய இன்னும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அறிவித்தார்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. நோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..!?- பரபர தகவல்கள்
  2. இன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்!
  3. சுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்!
  4. தொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்!
  5. இந்தியாவில் நெட்பிளிக்ஸின் குறைந்த விலை 'மொபைல் ஒன்லி' திட்டம்!
  6. வைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா?
  7. இன்று துவங்குகிறது 'ரியல்மீ X'-ன் 'ஹேட்-டூ-வெய்ட்' சேல்!
  8. 8 மணி நேர பேட்டரியுடன் Mi ப்ளூடூத் நெக்பேண்ட், இந்தியாவில் அறிமுகம்!
  9. மூன்று பின்புற கேமராக்களுடன் 'Mi A3' ஸ்மார்ட்போன் அறிமுகம்!
  10. ‘விவோ S1’ க்ளோபல் வேரியன்ட் அறிமுகம்… முழு தகவல்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.