விற்பனைக்கு வந்தது ‘ஹூவேய் P30 ப்ரோ’; அட்டகாச ஆஃபர் விவரங்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
விற்பனைக்கு வந்தது ‘ஹூவேய் P30 ப்ரோ’; அட்டகாச ஆஃபர் விவரங்கள்!

இந்த தயாரிப்பில் வெப்பநிலை கொண்டு நிறத்தை தேர்வு செய்யும் சென்சார் மற்றும் ஃப்ளிக்கர் சென்சார் நான்காவது கேமராவாக அமைந்துள்ளது

ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் ரூ.71,990க்கு இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது
  • 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வசதியை இந்த போன் கொண்டுள்ளது
  • க்ரோமா ஸ்டோர்களிலும் இந்த போன் கிடைக்கும்

ஹூவேய் P30 ப்ரோ சென்ற வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையல், இன்று விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான் தளத்திலிருந்து இந்த போனை வாங்க முடியும். இன்னும் ஒரு வாரத்தில் க்ரோமா ஸ்டோர்கள் மூலம் ஆஃப்லைன் சேல் ஆரம்பிக்கும் என்று ஹூவேய் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கான ப்ரீ-புக்கிங் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. பல அட்டகாச அம்சங்களுடன் ஹூவேய் P30 ப்ரோ இந்திய சந்தையில் என்ட்ரி கொடுத்துள்ளது. 

ஹூவாய் P30 ப்ரோ (Huawei P30 Pro) அறிமுக விலை மற்றும் ஆஃபர்கள்:

இந்தியாவில் ரூ.71,990க்கு விற்பனை செய்யப்படும் ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. இந்த தயாரிப்பு அரோரா மற்றும் ப்ரீத்திங் கிரிஸ்டல் நிறங்களில் வெளியாகிறது.

அமேசான்  தளத்தில் இந்த போனை வாங்குபவர்களுக்கு 5 சதவிகுதம் கேஷ்பேக் மற்றும் கட்டணமில்லா தவணைத் திட்டம் போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.

இந்த போனுடன் ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.2,200 கேஷ்பேக், 5 ரீசார்ஜ்களுக்கு டபுள் டேட்டா ஆஃபர் மற்றும் ரூ.10,000 மதிப்புள்ள சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் அறிமுக சலுகையாக இந்த போனுடன் (ரூ.15,990) மதிப்புள்ள ஹூவாய் வாட்ச் ஜிடி-யை வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடியாக கிடைக்கிறது.

ஹூவாய் P30 ப்ரோ அமைப்புகள் (Huawei P30 Pro Specifications):

இரண்டு சிம்-கார்டு ஸ்லாட்கள், ஆண்ட்ராய்டு 9.1 பைய் மென்பொருள், 6.47- இஞ்ச் OLED ஹெச்டி திரை, வாட்டர்-டிராப் டிசைன் திரை அமைப்பு மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரின்ட் போன்ற பல அமைப்புகளை இந்த ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஹைய் சிலிகான் க்ரீன் 980 SoC இடம் பெற்றுள்ளது. இந்த போனில் 8ஜிபி ரேம் வசதியும் (128/256/512) சேமிப்பு வசதி வகைகளும் அமைந்துள்ளது. பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பைப் பெற்றுள்ள இந்த ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன், 40 மெகா பிக்சல் முதற்கட்ட கேமரா சென்சார், 20 மெகா பிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 8 மெகா பிக்சல் டெலிஃபோட்டோ கேமரா சென்சாரை கொண்டுள்ளது.

இந்த தயாரிப்பில் வெப்பநிலை கொண்டு நிறத்தை தேர்வு செய்யும் சென்சார் மற்றும் ஃப்ளிக்கர் சென்சார் நான்காவது கேமராவாக அமைந்துள்ளது. மேலும் இந்த தயாரிப்பில் சிறந்த செல்ஃபிகளுக்காக 32 மெகா பிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

4,200mAh பேட்டரி வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வயர்லஸ் சார்ஜிங் வசதியைப் பெற்றுள்ளது. அதுபோல் புளுடூத் 5.0, 4ஜி VoLTE, Wi-Fi 802.11ac, இன்ஃபரா ரெட் சென்சார் மற்றும் பிராக்சிமிட்டி சென்சார் போன்றவை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.