ஃப்ளிப்கார்ட் ஹானர் டே சேல்; சலுகை விலையில் ஹானர் ஸ்மார்ட்போன்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஃப்ளிப்கார்ட் ஹானர் டே சேல்; சலுகை விலையில் ஹானர் ஸ்மார்ட்போன்கள்!

ஃப்ளிப்கார்ட்டில் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும்

ஹைலைட்ஸ்
  • ஹானர் 10-க்கு ரூ.5000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது
  • ஹானர் 9என் மொபைல் 2 வண்ணங்களில் கிடைக்கும்
  • ஹானர் 9ஐ-க்கு ரூ.3000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது

ஹுவாவே நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு “ஹானர் டே சேல்” என்ற பெயரில் தனது பிரபலமான ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் பிரத்தியேகமாக ஃப்ளிப்கார்ட்டில் மட்டும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 

இந்த ஹானர் டேஸ் சிறப்பு சலுகையானது நேற்று முதல் வரும் 21ஆம் தேதி வரை தொடர உள்ளது. இதில் ஹானர் 9 லைட், ஹானர் 10, ஹானர் 9 என் மற்றும் ஹானர் 9ஐ உள்ளிட்ட மாடல்களும் இடம்பெற்றுள்ளது. இதோடு ஹானர் 9 என் மாடலில் ராபின் எக் மற்றும் லாவெண்டர் பர்பிள் என மேலும் 2 நிறங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த 3 நாட்கள் ஹானர் டே சேலில் ஹானர் 9 லைட், 4ஜிபி ரேம்/ 64ஜிபி ஸ்டோர்ரேஜ் ரக மாடலின் விலையானது அதன் அசல் விலையான ரூ.14,999 ஆகும். ஆனால், எக்சேஞ்ச் ஆஃப்பராக ரூ.3,000 வரை இதில் பெற்றுக்கொள்ளலாம். ஹானர் 10 மாடலில் 6ஜிபி/128ஜிபி ஸ்டோர்ரேஜ் வகையின் உண்மையான விலையான ரூ.32,999 லிருந்து ரூ.5,000 தள்ளுபடி பெற்று ரூ.27,999 விலையில் பெறலாம். ஹானர் 9 ஐ, மாடலை அதன் உண்மையான விலையான ரூ.17,999 லிருந்து ரூ.3,000 தள்ளுபடி பெற்று ரூ.14,999 விலையில் பெறலாம்.

மேலும், ஹானர் 9N, 3ஜிபி ரேம்/ 32 ஜிபி ஸ்டோர்ரேஜ் மற்றும் 4ஜிபி ரேம்/ 64 ஜிபி ஸ்டோர்ரேஜ் வகை மாடல்கள் அதன் அசல் விலையா ன ரூ.11,999 மற்றும் ரூ.13,999  ஆகும். ஆனால், இந்த ஸ்மார்ட் போன்களுக்கான எக்ஸ்சேஞ்ச் ஆப்பராக ரூ.1,000 பெறலாம். இதோடு ஹானர் 9N, 4ஜிபி ரேம்/ 64 ஜிபி ஸ்டோர்ரேஜ் வகையில், ராபின் எக் மற்றும் லாவெண்டர் பர்பிள் நிற மாடல்களை ரூ.13,999 விலையில் இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே உள்ள சப்பையர் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

இவைத் தவிர சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 7எஸ் போன்களும் இந்த சேலில் பங்கேற்க உள்ளது. ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன், 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. இதன் விலை ரூ.6,999 ஆகும்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.