6.26 இன்ச் நாட்ச் டிஸ்பிளே கொண்ட ஹானர் 8c விரைவில் வெளியாகிறது!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
6.26 இன்ச் நாட்ச் டிஸ்பிளே கொண்ட ஹானர் 8c விரைவில் வெளியாகிறது!
ஹைலைட்ஸ்
  • ஹானர் 8சி வரும் வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 4,000 mAh பேட்டரியுடன், 6.26 இன்ச் நாட்ச் டிஸ்பிளேயைக் கொண்டுள்ளது.
  • இதில் 4ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம்/ 64ஜிபி ஸ்டோரேஜ் மாடல

ஹூவாயின் துணை நிறுவனமான ஹானர், வரும் வாரத்தில் ஹானர் 8சி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் 4,000 mAh பேட்டரி மற்றும் 6.26 இன்ச் நாட்ச் ஃபுல் வியூ டிஸ்பிளே உள்ளதாக ஐஏஎன்எஸ்-ற்க்கு அளிக்கப்பட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் வெளி வர உள்ளது. அவை, 4ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம்/ 64ஜிபி ஸ்டோரேஜ் ஆகும். ஹானர் 8சி கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சீனாவில் ஹானர் 8சியின் 4ஜிபி ரேம்/ 32ஜிபி ஸ்டோரேஜின் ஆரம்ப விலை CNY 1,099(ரூ.11,800) ஆகும். 4ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை CNY 1,399(ரூ. 15,000) ஆகும். இந்தியாவில் இதன் விலை ரூ.15,000க்கு மேலிருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

டூயல் நானோ சிம் கொண்ட ஹானர் 8சி EMUI 8.2வை அடிப்படையாகக் கொண்ட ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் 6.26 இன்ச் ஹெச்.டி+டிஏஃப்டி LCD ஐபிஎஸ் 19:9 என்ற வீதத்திலான டிஸ்பிளே 269பிபிஐ பிக்சல் டென்சிட்டியைக் கொண்டுள்ளது. ஆக்டோ-கோர் குவால்கம் ஸ்நாப்டிராகன் 626 SoC, அட்ரினோ 506 ஜிபியு, மற்றும் 32ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஹானர் 8சியின் பின்பக்க கேமிரா 13 மெகா பிக்சலை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமிரா உள்ளது. இரண்டு கேமிராவிலும் LED ஃபிளாஷ் உள்ளது. இதிலிருக்கும் 4,000 mAh பேட்டரியை தனியாக பிரிக்க முடியாது.

ஹானர் 8 சியில் புளூ கலர் வேரியண்ட் 3டி நானோ லெவல் டிசைன், ஹானர் 10 போன்ற பளபளப்பைக் கொடுக்கிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஹீவாய், ஹானர் 10 லைட் ரூ.21,990க்கு அறிமுகப்படுத்தியது. தீபாவளி சமயத்தில் இந்நிறுவனம் 1 மில்லியன் பொருட்களை விற்றதாக கூறியுள்ளது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே மற்றும் அமேசான் இ்ந்தியாவின் சேலில் ஹானர் 9என்(ரூ. 9,000) மற்றும் ஹானர் 8எக்ஸ்(ரூ. 14,999) மிக பிரபலமான ஸ்மார்ட்போன்களாக இருந்துள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.