ஹுவாய் ஹானர் 7எஸ், 18:9 டிஸ்பிளே செல்ஃபி ஃபிளாஷ் - விலையும் சிறப்பம்சங்களும்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஹுவாய் ஹானர் 7எஸ், 18:9 டிஸ்பிளே செல்ஃபி ஃபிளாஷ் - விலையும் சிறப்பம்சங்களும்

 

ஹுவாய் ஹானர் 7ஏ, 7சி மற்றும் 7என் வரிசையில் 7எஸ் பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் இந்த ஸ்மார்ட்ஃபோன் விற்பனைக்கு வந்தது. அதன் பிறகு இப்போது இந்தியாவுக்கு விற்பனைக்கு வந்திருக்கிறது.

18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட ஹெச்.டி+ எல்.இ.டி திரை, எல்.இ.டியுடன் கூடிய 5 மெகா பிக்செல் செல்ஃபி கேமரா,3029 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை இந்த ஸ்மார்ட்ஃபோனின் முக்கிய அம்சங்கள்.

ஹானர் 7எஸ் இந்தியாவில் விலை:

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்ஃபோன் 6,999 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் ஹானரின் ஆன்லைன் ஸ்டோரிலும் விற்பனைக்கு வருகிறது. கருப்பு, நீலம் மற்றும் தங்கம் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. செப்டம்பர் 14-ம் தேதி, நன்பகல் 12 மணிக்கு விற்பனை தொடங்குகிறது.


ஹானர் 7எஸ் ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள்:

இரண்டு சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அவுட் ஆஃப் தி பாக்ஸ் இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 4ஜி நெட்வொர்க் சிம் ஸ்லாட் ஒன்றில் மட்டுமே செயல்படும். 5.8 இன்ச் முழு ஹெச்.டி, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ தொடு திரை கொண்டது. குவாட் கோர் மீடியா டெக் பிராசர் கொண்டது 7எஸ். 2ஜி,பி ரேமும் இதில் இருக்கிறது. 16 ஜி.பி ஃபோன் மெமரியும், எஸ்.டி கார்டு மூலம் 256 ஜி.பி அளவுக்கு ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளவும் முடியும்.

பின் பக்கத்தில், 16 மெகா பிக்சல் கேமராவும், எல்.இ.டி ஃபிளாஷும் உள்ளது. முன் பக்கத்தில் 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும், எல்.இ.டி ஃபிளாஷும் இருக்கிறது.நெட்வொர்க் தொடர்பை பொறுத்தவரை 4ஜி எல்.டி.இ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி4.2, மைக்ரோ யூ.எஸ்.பி, ஜி.பி.எஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கும் இதில் உள்ளது. 3020mAh பேட்டரியும் இதில் உள்ளது. ஃபேஸ் அன்லாக் தொழில் நுட்ப அம்சம் கொண்டது 7 எஸ். ஆக்சலரோமீட்டர், லைட் சென்சார், பிராக்ஸ்மிட்டி சென்சார்கள் இதில் உள்ளன. இதன் எடை142கிராம்.

 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. 25x ஜூம் திறனுடன் Redmi Note 8 Pro!
  2. அடுத்த வாரம் அறிமுகமாகவுள்ள புதிய ரியல்மீ ஸ்மார்ட்போன்!
  3. சூரிய குடும்பத்தில் வேறு உயிர்கள் உள்ளதா? - ஆராயத் தயாராகிறது நாசா!
  4. 9,999 ரூபாயில் விற்பனைக்கு வந்த HTC Wildfire X ஸ்மார்ட்போன், விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!
  5. 3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட், அறிமுகமானது "Mi A3"!
  6. ஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது 'Redmi Note 8, Note 8 Pro' ஸ்மார்ட்போன்கள்!
  7. ஒரு விண்கல் பூமியைத் தாக்கும், தப்பிக்க வழிகள் இல்லை - எச்சரிக்கும் Elon Musk!
  8. 'Mi A3' ஸ்மார்ட்போனின் விலை என்ன, அறிமுகத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
  9. இந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்!
  10. 10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.