3 பின்புற கேமரா வசதியுடன் வெளியாகும் ‘ஹானர் 20i’!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
3 பின்புற கேமரா வசதியுடன் வெளியாகும் ‘ஹானர் 20i’!

மேஜிக் நைட், க்ரேடியன்ட் ப்ளூ, மற்றும் க்ரேடியன்ட் ரெட் கலர்களில் இந்த போனை வாங்கலாம். 

ஹைலைட்ஸ்
  • கேமிங்கிற்காக பிரத்யேக டர்போ 2.0 வசதியைப் பெற்றுள்ளது ஹானர் 20i
  • ஹானர் 20i, ஆண்ட்ராய்டு பைய் மென்பொருளில் இயங்குகிறது
  • 3,400 எம்.ஏ.எச் பேட்டரியால் பவரூட்டப்பட்டுள்ளது 20i.

ஹுவேய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர், தனது ஹானர் 20i ஸ்மார்ட் போனை சீனாவில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. க்ரேடியன்ட் டிசைன் கொண்ட ஹானர் 20i, மூன்று பின்புற கேமரா மற்றும் 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா வசதியுடன் வருகிறது. கிரின் 710 எஸ்.ஓ.சி வசதியுடன் வரும் இந்த போன், 4 வித்தியாச வகைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு பைய் மென்பொருள் மூலம் இயங்கும் ஹானர் 20i, கேமிங்கிற்காக பிரத்யேக டர்போ 2.0 வசதியைப் பெற்றுள்ளது.

ஹானர் 20i விலை:

ஹானர் 20i, 4 வித்தியாச வகைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. மேஜிக் நைட், க்ரேடியன்ட் ப்ளூ, மற்றும் க்ரேடியன்ட் ரெட் கலர்களில் இந்த போனை வாங்கலாம். 

- ஹானர் 20i (4ஜிபி + 128ஜிபி): சுமார் ரூ.16,600

- ஹானர் 20i (6ஜிபி + 64ஜிபி): சுமார் ரூ.16,600

- ஹானர் 20i (6ஜிபி + 128ஜிபி): சுமார் ரூ.19,700 

- ஹானர் 20i (6ஜிபி + 128ஜிபி): சுமார் ரூ.22,800

- ஹானர் 20i (ஏஏபிஇ எடிஷன்): சுமார் ரூ.22,800

ஹானர் 20i, சீனாவைத் தவிர வெளி சந்தைகளில் எப்போது கிடைக்கும் என்பது குறித்து தெரியவில்லை. ஆனால், ஹானர் லைட் என்ற பெயரில் அது மற்ற சந்தைகளில் விற்பனைக்கு வரலாம். 

ஹானர் 20i சிறப்பம்சங்கள்:

நானோ டூயல் சிம் கொண்டு இயங்கும் ஹானர் 20i, ஆண்ட்ராய்டு பைய் மென்பொருளில் இயங்குகிறது. 6.21 முழு ஹெச்.டி+ திரை கொண்ட ஹானர் 20i, 19:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ ஒளித் திறன் கொண்டது. போன், டாப்-ல் வாட்டர் ட்ராப் நாட்ச் பொருத்தப்பட்டுள்ளது. கிரின் 710 எஸ்.ஓ.சி வசதியுடன் வரும் இந்த போன், 8 ஜிபி ரேம் வசதியுடனும் 256 ஜிபி சேமிப்பு வசதியுடன் கிடைக்கப் பெறும். 

பின்புற கேமராவைப் பொறுத்தவரை ஹானர் 20i-யில், 24, 8 மற்றும் 2 மெகா பிக்சல் கேமராக்கள் இருக்கும். முன்புறம் 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இருக்கும். 

4ஜி எல்.டி.இ, வை-ஃபை 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் 4.2, குவால்கம் aptX ஹெச்.டி ஆடியோ, மைக்ரோ யு.எஸ்.பி 2.0 போர்ட், 3.5 எம்.எம் ஹெட்போன் ஜாக் கனெக்டிவிட்டி வசிதகளை இந்த போன் பெற்றுள்ளது. 3,400 எம்.ஏ.எச் பேட்டரியால் பவரூட்டப்பட்டுள்ளது 20i.


 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.