இந்தியாவில் இன்று விற்பனைக்கு வரவுள்ள 'ஹானர் 20i': விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் இன்று விற்பனைக்கு வரவுள்ள 'ஹானர் 20i': விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

இன்று விற்பனைக்கு வரவுள்ள ஹானர் 20i

ஹைலைட்ஸ்
 • இந்த ஹானர் 20i ஆக்டா-கோர் கிரின் 710F எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ளது.
 • இதன் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது
 • இந்த ஸ்மார்ட்போன் 3400mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது

'ஹானர் 20i' ஸ்மார்ட்போன் முதன் முறையாக இன்று இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. ஜூன் 18-ஆம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ள ஹானர் 20 தொடரின் இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் சென்று வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. 6.21-இன்ச் FHD+ திரை, மூன்று பின்புற கேமராக்கள், 3400mAh பேட்டரி ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுடன், ஹானர் 20 தொடரின் மற்ற ஸ்மார்ட்போன்களான ஹானர் 20 மற்றும் ஹானர் 20 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களும் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 20i: விலை!

ஹானர் 20i' ஸ்மார்ட்போன், இந்தியாவில் இன்று விற்பனையாகவுள்ளது. 4GB RAM மற்றும் 128GB செமிப்பு அளவு என ஒரே வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் 14,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் விற்பனையாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், நீலம் (Phantom Blue) மற்றும் கருப்பு (Midnight Black) என இரு வண்ணங்கள் கொண்டு வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 18-ஆம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனையாகவுள்ளது. 

ஹானர் 20i: சிறப்பம்சங்கள்!

இந்த ஹானர் 20i ஸ்மார்ட்போன் 6.21-இன்ச் FHD+ திரை அளவு, 1080x2340 பிக்சல்கள், 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பில் செயல்படும் இந்த ஸ்மார்ட்போனில், ஆக்டா-கோர் கிரின் 710F எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 

மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். முதன்மையாக 24 மெகாபிக்சல் கேமராவுடன்  8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 3400mAh  அளவிலான பேட்டரியை கொண்டு வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G வசதி மற்றும் ப்ளூடூத் v4.2, வை-பை வசதிகளை கொண்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. 2020 iPhone மாடல்களில் பெரிய பேட்டரியா...? முழுசா தெரிஞ்சுக்கோங்க!
 2. டூயல் செல்ஃபி கேமராக்களுடன் வெளியானது Redmi K30, Redmi K30 5G!
 3. Vivo U20-யின் 8GB RAM வேரியண்ட் அறிமுகம்! விலை, விற்பனை சலுகைகள் இதோ...
 4. இனி Balance & Signal வேண்டாம், ஆனால் கால் பண்ண முடியும் - Airtel-ன் சரவெடி திட்டம்!
 5. 8GB RAM, Intel Core Processors உடன் வெளியானது RedmiBook 13! 
 6. லீக் ஆனது Realme-யின் 'Air Pods' விலை விவரம் - எவ்ளோனு தெரிஞ்சா அசந்துபோயிடுவீங்க..!
 7. Flipkart-ல் அதிரடி சலுகைகள், தள்ளுபடிகளுடன் விற்பனைக்கு வந்த Realme 5s! 
 8. இந்தியாவில் இன்று மதியம் விற்பனைக்கு வருகிறது Redmi Note 8, Redmi 8! 
 9. போட்டிக்கு போட்டி! வெறும் 98 ரூபாய்க்கு அதிரடி ரீசாஜ் ப்ளானை அறிவித்த ஜியோ!
 10. Vodafone Idea-வின் அதிரடி... குறைந்த விலையில் அறிமுகமான ரீசார்ஜ் பிளான்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.