‘ஹானர் 10i’ போனின் புதிய வகை ரஷ்யாவில் விற்பனை; முக்கிய தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
‘ஹானர் 10i’ போனின் புதிய வகை ரஷ்யாவில் விற்பனை; முக்கிய தகவல்கள்!

இந்த போனில் 6.21 முழு எச்.டி+ திரை இருக்கிறது. 19.5:9 ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளேவும் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வசதிகளும் உள்ளன.

ஹைலைட்ஸ்
  • HiSilicon Kirin 710 SoC-யால் இந்த போன் பவரூட்டப்பட்டுள்ளது
  • இந்த போனில் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன
  • ஆண்ட்ராய்டு 9.0 பைய் இயங்கு மென்பொருளை இந்த போன் பெற்றுள்ளது

ஹானர் 10i ஸ்மார்ட்போனின், புதிய வகை போன் ரஷ்யாவில் விற்பனையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. சென்ற மாதம் ஹானர் 10i, ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஹானர் 10i போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி இருக்கும் புதிய வகை ரஷ்யாவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹானர் 10i குறித்த இந்த புதிய தகவலை சீன ரெகுலேட்டர் TENAA வெளியிட்டுள்ளது. ஹானர் 10i போனின் புதிய வேரியன்ட்டில் மேலும் என்னென்ன வசதிகள் இருக்கும் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. 

ரஷ்யாவில் முன்னர் வெளியான ஹானர் 10i போனின் விலை இந்திய மதிப்பில் 21,100 ரூபாயாக இருக்கிறது. கறுப்பு, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களில் இந்த போன் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் வரும் போனில் 3டி கிரேடியன்ட் ஃபினீஷிங் இருக்கும். கருப்பு நிற போனில் 3டி ஃபினீஷிங் மட்டுமே இருக்கும். 

ஹானர் 10i ஸ்பெக்ஸ்:

இந்த போனில் 6.21 முழு எச்.டி+ திரை இருக்கிறது. 19.5:9 ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளேவும் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வசதிகளும் உள்ளன. ஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருள் மூலம் இயங்கும் இந்த போன், HiSilicon Kirin 710 SoC-யால் பவரூட்டப்பட்டுள்ளது. 

போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் உள்ளன. 24 மெகா பிக்சல் கொண்ட முதன்மை சென்சார், 8 மெகா பிக்சல் கொண்ட இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகா பிக்சல் மூன்றாவது சென்சார் பின்புறம் உள்ளன. செல்ஃபிக்காக 32 மெகா பிக்சல் கொண்ட மிகவும் பவர்ஃபுல்லான அட்டகாச கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

3,400mAh பவர் கொண்ட பேட்டரி, 4ஜி வோல்ட் சப்போர்ட், ஃபிங்கர் பிரின்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக் சப்போர்ட் உள்ளிட்ட வசதிகளையும் இந்த போன் பெற்றுள்ளது. 


 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.