அதிரடி தள்ளுபடியுடன் ஆரம்பமாகிறது Flipkart Republic Day Sale!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
அதிரடி தள்ளுபடியுடன் ஆரம்பமாகிறது Flipkart Republic Day Sale!

பிளிப்கார்ட், ஜனவரி 19 முதல் ஜனவரி 22 வரை குடியரசு தின விற்பனையை நடத்துகிறது

ஹைலைட்ஸ்
  • பிளிப்கார்ட் விற்பனை Redmi 8A & Realme 3-ல் தள்ளுபடியைக் கொண்டுவரும்
  • iPhone 7, Motorola One Vision, Lenovo K10 Note-ல் ஒப்பந்தங்கள் கிடைக்கு
  • பிளிப்கார்ட், வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி செய்யும்

Redmi 8A, Motorola One Action, Realme 3, Motorola One Vision, iPhone 7 மற்றும் Lenovo A6 Note ஆகியவை பிளிப்கார்ட்டில் குடியரசு தின விற்பனையின் போது தள்ளுபடியைப் பெற உள்ளன. இந்த நான்கு நாள் விற்பனையானது, ஜனவரி 19 முதல் ஜனவரி 22 வரை நடைபெறும். இது iPhone XS மீது தள்ளுபடியைக் கொண்டுவருவதாகவும் கிண்டல் செய்யப்படுகிறது. ஜனவரி 19 மற்றும் ஜனவரி 22-க்கு இடையில், பிரபலமான அமேசான் கிரேட் இந்தியன் விற்பனையை அமெரிக்க நிறுவனம் ஹோஸ்ட் செய்வதால், ஃபிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையுடன் அமேசானை எதிர்ப்பதை ஈ-காமர்ஸ் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிளிப்கார்ட் விற்பனை, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு தயாரிப்புகளுக்கு தள்ளுபடியை வழங்குவதைத் தவிர“Blockbuster Deals”, “Rush Hours” மற்றும் “Price Crash” ஆகியவற்றை ஹோஸ்ட் செய்கிறது.

பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையின் போது ஸ்மார்ட்போன் சலுகைகளை வழங்கும் ஒரு பிரத்யேக மைக்ரோசைட் படி, Redmi 8A ஆரம்ப விலையுடன் ரூ. 6,499-யில் இருந்து ரூ. 5,999-க்கு கிடைக்கும். இந்த விற்பனை, Motorola One Action ரூ. 8,999-க்கு கொண்டுவந்துள்ளது. இந்த கைபேசி பொதுவாக ரூ. 10.999-க்கு சில்லரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் ஐபோனைத் தேடும் வாடிக்கையாளர்கள் iPhone 7 32GB ஸ்டோரேஜ் மாடலை, ரூ. 27,999-யில் இருந்து ரூ. 24,999-க்கு வாங்கலாம். பிளிப்கார்ட் விற்பனையின் போது Realme 3 ரூ. 6,999-க்கு கிடைக்கும். இது தற்போதைய Realme 3-யின்தொடக்க விலையான ரூ. 7,499-யில் இருந்து குறைக்கப்பட்டதாகும்.

பிளிப்கார்ட் விற்பனையில் Motorola One Vision 128GB ஸ்டோரேஜ் வேரியண்டையும் ரூ. 14,999-யில் இருந்து ரூ. 13,999-க்கு வழங்குகிறது. 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட Lenovo A6 Note-க்கு தள்ளுபடி விலையாக ரூ. 5,499-க்கு பெறலாம். இது தற்போதுள்ள ரூ. 7,999-யில் இருந்து குறைக்கப்பட்ட விலையாகும். மேலும், 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் கொண்ட Moto e6s ரூ. 6,999-யில் இருந்து ரூ. 6,499-க்கு கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்கு Lenovo K10 Note-ஐயும் ரூ. 11,999-யில் இருந்து ரூ. 8,999-யாக குறைக்கப்பட்டுள்ளது.

Asus 5Z-யின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ. 18,999 விலைக் குறியீட்டில் பிளிப்கார்ட் வழங்குகிறது. இந்த போன் தற்போது ரூ. 21.999-க்கு சில்லரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், இந்த விற்பனை, Asus Max M2-வின் ஆரம்ப விலையுடன் ரூ. 7,499-யில் இருந்து ரூ. 6,999-க்கு வழங்குகிறது. Honor 10 Lite, பிளிப்கார்ட் விற்பனையின் போது தள்ளுபடியைப் பெறும். மேலும், அதன் ஆரம்ப விலையில் ரூ. 8,499-யில் இருந்து ரூ. 7,999 விற்பனை செய்யப்படும்.

இந்த பிளிப்கார்ட் விற்பனையானது, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்களில் 80 சதவீதம் தள்ளுபடி, ஸ்மார்ட்வாட்ச்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி, ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் டிவி & சாதனங்களுக்கு 75 சதவீதம் தள்ளுபடி ஆகியவற்றைக் கொண்டுவருவதாகவும் கூறப்படுகிறது. Acer Swift 3 laptop, Apple Watch Series 3 மற்றும் Apple AirPods விற்பனையின் போது கவர்ச்சிகரமான விலையைப் பெற வாய்ப்புள்ளது. Acer, HP, Dell மற்றும் Lenovo போன்ற நிறுவனங்களிலிருந்து மடிக்கணினிகள் மற்றும் டெஸ்க்டாப்புகளில் 45 சதவீதம் வரை தள்ளுபடி இருக்கும்.

DSLRs மற்றும் டிஜிட்டல் கேமராக்களில் தள்ளுபடி பெறும் வாடிக்கையாளர்களும் பல்வேறு மாடல்களில் சில தள்ளுபடிகள் குறித்து மகிழ்ச்சி அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், Apple iPad mini, Apple iPad Air, Apple iPad Pro, Huawei M5 lite மற்றும் Honor MediaPad T3 போன்ற டேப்லெட்டுகள் கண்கவர் ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகளைப் பெற கிண்டல் செய்யப்படுகின்றன. விளையாட்டாளர்கள் பல்வேறு PC மற்றும் console games, gaming headsets மற்றும் gaming mice ஆகியவற்றில் தள்ளுபடியைப் பெறுவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்.

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகள் அல்லது கோட்டக் மஹிந்திரா டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளில் ஜனவரி 15-17 வரை முன்பதிவு இருக்கும். இதன் கீழ், விற்பனையின் போது பட்டியலிடப்படுவதை விட விலைகள் குறைவாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் ஜனவரி 18-ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கி குடியரசு தின விற்பனையை அணுக முடியும்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.