நாளை துவங்கும் ஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ்: நீங்கள் தவறவிடக்கூடாத சிறந்த சலுகைகள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
நாளை துவங்கும் ஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ்: நீங்கள் தவறவிடக்கூடாத சிறந்த சலுகைகள்!

Photo Credit: Flipkart India

ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள "பிக் ஷாப்பிங் டேஸ்" விற்பனை

ஹைலைட்ஸ்
 • ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு, நாளை இரவு 8 மணிக்கே விற்பனை
 • மே 15 முதல் மே 19 வரை, ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது
 • எச் டி எப் சி கார்டுகள் மூலமாக பணம் செலுத்தினால் 10 சதவிகிதம் தள்ளுபடி

ஃப்ளிப்கார்ட் நிறுவனம், சென்ற வாரம் தனது சம்மர் சேலை முடித்த ஒரு சில நாட்களிலேயே, அடுத்த அதிரடியாக ‘பிக் ஷாப்பிங் டேஸ்' விற்பனை குறித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த விற்பனை மே 15 முதல் மே 19 வரை, ஐந்து நாட்கள் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது.

மேலும் இதற்காக ஒரு டீசர் பக்கத்தையும், தனது தளத்தில் அறிமுகப்படுத்தியிருந்த இந்த நிறுவனம், "மொபைல்போன்கள் - என்றும் இல்லாத அளவு குறைந்த விலையில்" என்ற வாசகங்களுடன் தனது சலுகையை அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு பின்னரும் ஒவ்வொரு நாளும், ஸ்மார்ட்போன்களுக்கென பல சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, ஃப்ளிப்கார்ட். 

இந்த சலுகை விற்பனை, அனைவருக்கும் நாளை மறுநாள் நள்ளிரவு 12 மணிக்குதான் துவங்கும் என்றாலும், ஃப்ளிப்கார்டின் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு, நாளை இரவு 8 மணிக்கே இந்த சலுகைகள் கிடைக்கப்பெறும். மே 15 முதல் மே 19 வரை நடக்கவுள்ள இந்த விற்பனையில், நீங்கள் பெரும் ஒவ்வொரு மொபைல்போனையும் எச் டி எப் சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக பணம் செலுத்தி பெற்றுக்கொண்டால், மொபைல்போனின் விலையிலிருந்து 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும் எனவும் அறிவித்திருந்தது.

இந்த விற்பனையில் ஸ்மார்போன்கள் மட்டுமின்றி, லேப்டாப், டிவி, வீட்டு சாதனங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் ஆடைகளென பலவற்றிற்கு சலுகைகளை அறிவித்திருக்கிறது ஃப்ளிப்கார்ட். அப்படி அறிவித்துள்ள சலுகைகளில், நீங்கள் எந்த பொருட்களையெல்லாம் தவரவிடக்கூடாது?

ஃப்ளிப்கார்ட் "பிக் ஷாப்பிங் டேஸ்": ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகைகள்!

"பிக் ஷாப்பிங் டேஸ்"-ல் ஸ்மார்ட்போன்களுக்கென சிறந்த சலுகைகளை அறிவித்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதில் நோக்கியா போன்களுக்கென சலுகைகளை வழக்கியுள்ள இந்த நிறுவனம், இந்த விற்பனையில், நோக்கியா 5.1 Plus-ன் விலை 7,999 ரூபாயும், நோக்கியா 6.1 Plus-வின் விலை 12,999 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் ரூபாய் 12,900 மதிப்புள்ள சாம்சங் கேலக்சி J6 (4GB, 64GB), இதுவரை என்றும் இல்லாத அளவு ரூபாய் 9,490 விலைக்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் நடைபெறவுள்ள இந்த விற்பனையில் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் Pro M1(Asus ZenFone Max Pro M1) என்றும் இல்லாத அளவு குறைந்த விலையில் கிடைக்கவுள்ளது. 12,999 ரூபாய் மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போனின் பதிப்பு, இந்த விற்பனையில் 8,999 ரூபாய் மட்டுமே. அசுஸ் ஜென்போன் மேக்ஸ் Pro M2 (Asus ZenFone Max Pro M2)-வின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 9,999-ல் இருந்தே துவங்குகிறது. மேலும் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் M2 (Asus ZenFone Max M2)-வின் விலையும் குறைக்கப்பட்டு ரூபாய் 8,499-திற்கு விற்கப்படவுள்ளது. இது மட்டுமின்றி அசுஸ் ஸ்மார்ட்போன்களுக்கு வெரும் 9 ரூபாயிலேயே, முழு போனுக்குமான பாதுகாப்பு திட்டத்தை வழங்கவுள்ளது.

ஹானர் போன்களுக்கும் பல சலுகைகளை அளிக்கிறது இந்த விற்பனை.  ஹானர் 10 லைட்(Honor 10 Lite)-இன் விலை ரூபாய் 12,999 எனவும், ஹானர் 9 லைட்(Honor 9 Lite)-இன் விலை 7,999 ரூபாய் எனவும் மற்றும் ஹானர் 8X(Honor 8X)-இன் விலையை ரூபாய் 14,999 ஆகவும் குறைத்து விற்பனைக்கு வைத்துள்ளது. 

மேலும் குறைந்த விலையிலான பட்ஜெட் போன்களுக்கும் பல சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி 6,999 ரூபாய் மதிப்புள்ள அசுஸ் ஜென்போன் லைட் L1(ZenFone Lite L1) 4,999 ரூபாய்க்கும், லெனோவா A5(Lenovo A5) 5,499 ரூபாய்க்கும் விற்பனையாகவுள்ளது. மேலும் 8,999 ரூபாய் மதிப்புள்ள ஹானர் 7s(Honor 7s)-ம் இந்த விற்பனையில் 5,499 ரூபாய்க்கு விற்கப்படவுள்ளது. மேலும் சியோமி ரெட்மீ 6, ரூபாய் 6,999-க்கும், ரெட்மீ Y2 ரூபாய் 7,999-க்கும் விற்பனையாகவுள்ளது. 

மேலும் தன் பக்கத்தில் ஓப்போ A3-ன் விலை இன்னும் அறிவிக்கப்படாமல், இதுவரை இல்லாத அளவு மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஒருவேளை நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ஜ் செய்து புதிய போனை பெற விரும்பினால், உங்கள் ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ஜ் செய்து விவோ V11 Pro, மோடோ G7, மற்றும் விவோ V15 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களை 6000 ரூபாய் வரை தள்ளுபடியில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஐபோன் XR-ம் இந்த விற்பனையில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல்போன்கள் மட்டுமின்றி டிவி மற்றும் வீட்டு சாதனங்களுக்கும் இந்த விற்பனையில் சலுகைகளை வழங்கியுள்ளது ஃப்ளிப்கார்ட். ஆதன்படி ஏம் ஐ, வர்ல்பூல், சாம்சங், எல் ஜி மற்றும் பல முன்னனி நிறுவனங்களின் டிவி மற்றும் வீட்டு சாதன பொருட்களின் விலைகளில் 75 சதவிகிதம் வரையில் தள்ளுபடி அறிவித்துள்ளது. மேலும் பல முன்னனி நிறுவனங்களின் லேப்டாப் மற்றும் கேமராக்களுக்கும் 80 சதவிகிதம் வரையில் தள்ளுபடி அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த "பிக் ஷாப்பிங் டேஸ்" விற்பனையில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பல புதிய ஸ்மார்ட்போன்களுக்கு ஃப்ளாஷ் சேலையும் நடத்தவுள்ளது. 
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்களின் அடுத்த விற்பனை எப்போது தெரியுமா?
 2. பட்ஜெட் பாப்-அப் செல்ஃபி ‘ஒப்போ K3’ போன் இன்று முதல் அமேசானில் விற்பனை!
 3. 'ரியல்மீ 3i' ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை, தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
 4. ஆகஸ்ட் 7-ல் இந்தியாவில் அறிமுகமாகிறது 'விவோ S1', எதிர்பார்க்கப்படும் விலை?
 5. ‘சாம்சங் கேலக்ஸி M’ வரிசை போன்களுக்கு அதிரடி ஆஃபர்- எவ்வளவு விலை குறைப்புனு தெரிஞ்சுக்கோங்க!
 6. 3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே சென்சார்- அட்டகாச வசதிகள் கொண்ட ‘விவோ Z5’!
 7. 64 மெகா பிக்சல் கொண்ட ரெட்மீ போன்… முழு விவரம் உள்ளே!
 8. இந்தியாவில் ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்கள், என்ன விலையில் அறிமுகம்?
 9. விண்ணில் பாயவுள்ள சந்திராயன்-2, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
 10. ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்களில் இந்த பிரச்னை இருக்காது!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.