ஃப்ளிப்கார்ட், அமேசானின் சுதந்திர தின விற்பனை: என்ன ஸ்பெஷல்?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஃப்ளிப்கார்ட், அமேசானின் சுதந்திர தின விற்பனை: என்ன ஸ்பெஷல்?

ஃப்ளிப்கார்ட், அமேசானின் சுதந்திர தின விற்பனை

ஹைலைட்ஸ்
  • ஃப்ளிப்கார்ட்டில் இந்த விற்பனை ஆகஸ்ட் 10 வரை நடைபெறும்
  • அமேசானில் இந்த விற்பனை ஆகஸ்ட் 11 வரை நடைபெறும்
  • இரண்டு தளங்களிலும் இந்த விற்பனை துவங்கிவிட்டது

ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தற்போது தங்கள் சுதந்திர தினத்தை  இந்தியாவில் சிறப்பு விற்பனையை நடத்தி வருகின்றன. ஆன்லைன் சில்லறை நிறுவனங்களும் இரண்டும் நூற்றுக்கணக்கான தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அனைத்து முக்கிய தயாரிப்பு வகைகளுக்கும் வழங்குகின்றன. புதிய ஸ்மார்ட்போனை மேம்படுத்த அல்லது வாங்க இது ஒரு சிறந்த நேரம். ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் இப்போது சில பிரபலமான ஸ்மார்ட்போன்களில் சிறந்த தள்ளுபடிகளில் வழங்குகின்றன. அமேசான் எஸ்பிஐ கிரெடிட் கார்டுதாரர்களுக்கு கூடுதல் தள்ளுபடியை வழங்குகிறது, ஃப்ளிப்கார்ட் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து கூடுதல் தள்ளுபடியை வழங்குகிறது.

ஃப்ளிப்கார்ட், அமேசானின் சுதந்திர தின விற்பனை - ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகைகள்

ஆப்பிள் ஐபோன் XR (Apple iPhone XR)

ஆப்பிளின் ஐபோன் XR ஸ்மார்ட்போனின் விலை அமேசானின் ப்ரீடம் சேல் 2019 விற்பனையில் 51,999 ரூபாய். நீங்கள் கொஞ்சம் பணத்தை சேமிக்க விரும்பினால் இந்த ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் சலுகையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனிற்கு 7,700 ரூபாய் வரை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் குறிக்கப்பட்ட விலையில் கூடுதலாக 1,500 ரூபாய் தள்ளுபடி.

விவோ Z1 Pro (Vivo Z1 Pro)

விவோ Z1 Pro-விற்கு ஃப்ளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் எந்த ஒரு தள்ளுபடியும் வழங்கப்படவில்லை, ஆனால் நீங்கள் ஃப்ளிப்கார்ட்டின் 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்' விற்பனையின் போது ஏதேனும் ஆன்லைன் கட்டண முறையைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை பெற்றால் 1,000 ரூபாய் தள்ளுபடி பெறலாம். சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனிற்கான ஒரு நல்ல சலுகை இதுதான். விவோ Z1 Pro 4GB RAM, 64GB சேமிப்பு வகை 14,990 ரூபாய் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகமானது. நீங்கள் இப்போது இந்த ஸ்மார்ட்போனை ஃப்ளிப்கார்ட் விற்பனையில் 13,990 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளலாம்.

கூகுள் பிக்சல் 3a XL (Google Pixel 3a XL)

கூகுள் பிக்சல் 3a XL ஸ்மார்ட்போனும் இந்த வார 'நேஷனல் ஷாப்பிங் டேஸ் சேல்' விற்பனையில் 39,999 ரூபாய்க்கு கிடைக்கப்பெறும். மிக சமீபத்திய விலைக் குறைப்பு கூகுள் பிக்சல் 3a XL ஸ்மார்ட்போன் 40,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. விற்பனையின் போது, ​​உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்து 17,900 ரூபாய் வரி கூடுதல் தள்ளுபடியை பெறலாம்.

ப்ளாக் ஷார்க் Black Shark 2 (6GB, 128GB)

பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனின் விலை ஃப்ளிப்கார்ட்டில் இப்போது 34,999 ரூபாய். இந்த கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் 39.999 ரூபாய் என்ற விலைக்கு அறிமுகமானது. ஒரு அட்டகாசமான கேமிங் ஸ்மார்ட்போனை பெறுவதற்காக நீங்கள் காத்திருந்தால், பிளாக் ஷார்க் 2 ஒரு நல்ல விலையில் கிடைக்கப்பெறுகிறது. 

ரெட்மீ நோட் 7S (Redmi Note 7S)

இந்த விற்பனையில் ரெட்மீ  நோட் 7S ஸ்மார்ட்போனும் சலுகையை பெற்றுள்ளது. அதன்படி 3GB / 32GB வகை ரெட்மீ நோட் 7S 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. அதாவது ரெட்மீ நோட் 7S விலை 1,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.